அடிமை விதையும் சுதந்திர வேரும்!

சுதந்திரத்தின் காலப் பயணம்!ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்ச.தமிழ்ச்செல்வன் ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறு 69 ஆண்டுகளை நிறைவுசெய்து, 70-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது இந்தியா. இந்த மகிழ்ச்சியான நாளில், நம் மண்ணில் அடிமைத்தனத்துக்கான விதை விழுந்த நாள் முதல், சுதந்திர வேர் பரவிய நாட்கள் வரையான சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போமா?

கி.பி 1498-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கப்பலில் புறப்பட்ட வாஸ்கோ ட காமா, ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு, இந்தியாவின் கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கினார். பிறகு, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி எனப் பலவும் திறந்திருக்கும் வீட்டுக்குள் நுழைந்தன. அப்போது...

இந்தியா, பல மன்னர்களின் கையில் பல தேசங்களாகப் பிரிந்து கிடந்தது. மன்னர்களுக்கு இடையில் இருந்த போட்டிகள், சண்டைகளைப் பயன்படுத்தி, ஐரோப்பிய வியாபார கம்பெனிகள் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவினர். வியாபாரம் செய்வதாக நுழைந்தவர்கள், மெள்ள மெள்ள ஆட்சியைப் பிடித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்