சுட்டி ஸ்டார் நியூஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஐந்து வயதில் 1,330 குறட்பாக்கள்!

திருக்குறளில், 1,330 குறள்களையும் எப்படிக் கேட்டாலும் சொல்லி அசரவைக்கிறார், ஐந்து வயது வைஷ்ணவி.

காரைக்குடி, அழகப்பா அகாடமி பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி, வைஷ்ணவி. இவர், காரைக்குடி வள்ளுவர் பேரவையின் 'அறம் விருதை'ப் பெற்றிருக்கிறார். ‘‘எல்லா அம்மாக்களும் குழந்தைகளுக்கு ரைம்ஸ்தான் சொல்லித்தருவாங்க. என் அம்மா, நான் ஸ்கூல்ல சேர்றதுக்கு முன்னாடியே எனக்கு திருக்குறள் சொல்லிக்கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு ஐந்து குறள்களை செல்போனில் ரெக்கார்டு பண்ணி கேட்கவைப்பாங்க. ஸ்கூல்ல சேர்ந்ததும், ஒவ்வொரு 10 அதிகாரங்களைச் சொன்னதும், புத்தகம் பரிசாகக் கொடுத்து ஊக்கப்படுத்தினார், தமிழாசிரியர் செயம்கொண்டான். இந்த ஊக்கம்தான் எனக்கு அறம் விருதைக் கொடுத்திருக்கு'' என்கிறார், இந்த இளம் திருக்குறட் செல்வி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்