விவசாயிகளை வணங்குவோம்!

சபாஷ் குறும்பட நாயகன்

"நான் பார்க்கிற, படிக்கிற விஷயங்கள் என் மனசை டிஸ்டர்ப் பண்ணும்போதெல்லாம், அதை மத்தவங்களோடு ஷேர் பண்ணிக்க நினைப்பேன். அதுக்கு நான் தேர்ந்தெடுத்த கருவிதான், கேமரா'' என அழகாக ஆரம்பிக்கிறார் சூரிய நாராயணன்.

கடலூர், ஏ.ஆர்.எல்.எம் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சூரியநாராயணன், இந்த ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் குறும்படப் போட்டியில், தனது 'விவசாயி' என்ற குறும்படத்துக்காக, இயக்குநர் வசந்த பாலன் கையால், ‘இளம் படைப்பாளி' விருதை வாங்கியிருக்கிறார்.

‘‘நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா ஒரு கேமரா வெச்சிருந்தார். கேமராதான் என் ஃப்ரெண்ட். ஸ்கூல்விட்டு வந்ததும், அந்தத் தெருவில் பார்க்கிறதை எல்லாம் விளையாட்டா படம் எடுப்பேன். அப்பாவுக்குத் தெரியாமல், எடுத்த இடத்திலேயே நல்ல பிள்ளையா  வெச்சிடுவேன். ஒரு நாள் அப்பா என்னைக் கூப்பிட்டார். பயந்துகிட்டே பக்கத்துல போனேன். ‘சூர்யா, படம் எல்லாம் சூப்பரா எடுத்து இருக்கே. வெரிகுட்'னு பாராட்டினார். அந்த கேமராவை எனக்கே கொடுத்துட்டார். அப்புறம், குட்டி குட்டியா வீடியோ எடுக்க ஆரம்பிச்சேன். ஒருநாள், அப்பாவின் நண்பரான ஆதித்யா அங்கிளும் இன்னும் சிலரும் வீட்டுக்கு வந்தாங்க. ‘இவங்க வீடியோகிராஃபர்ஸ். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் இவங்ககிட்டே  கேட்டுத் தெரிஞ்சுக்க'னு சொன்னார். அவங்க எடிட்டிங்ல ஆரம்பிச்சு, நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. இப்படி என்னை ஊக்கப்படுத்தியவங்களைப் பற்றிச் சொல்லிட்டே போனால், அதுவே பெரிய சினிமா ஆகிடும்'' எனச் சிரிக்கிறார் சூரியநாராயணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்