மணி அடித்து, புலன் உறுப்புகளை அறி!

‘புலன் உறுப்புகள்’ பகுதிக்கு உரியது.

‘‘டீச்சர், இவன் என் காதைப் பிடிச்சுத் திருகிட்டான்'' என்று ஒரு மாணவரின் புகாரோடு அன்றைய வகுப்பு ஆரம்பித்தது.

‘‘காது, மூக்கு போன்ற உறுப்புகள் மென்மையானவை. அவற்றை முரட்டுத்தனமாகக் கையாளக் கூடாது. உங்கள் சண்டையிலிருந்தே இன்றைய பாடத்தை ஆரம்பிக்கலாமா?'' என்றதும், மாணவர்கள் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்கள்.

புலன் உறுப்புகள் பற்றி விளக்கிவிட்டு, அவற்றின் படங்களைத் தனித்தனியே சார்ட்டில் வரையச் சொன்னேன். அவற்றை, மாணவர்களின் சட்டையில் குண்டூசி மூலம் இணைத்தேன்.  ஒரு மாணவர், தன் சார்ட்டில் இருக்கும் புலன் உறுப்பு பற்றி சைகையால் நடித்துக் காண்பிக்க  வேண்டும். உதாரணமாக, ‘காது' படம் வைத்திருப்பவர், மற்ற மாணவர்களின் காதருகே சென்று, தன் கையில் மணி இருப்பதுபோல பாவனை செய்து நடிக்க வேண்டும்.

புலன் உறுப்புகளைப் பாதுகாக்கும் முறை, பயன்பாடு ஆகியவற்றை கூறச்செய்து, மதிப்பீடு வழங்கினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்