இலையைக் கண்டுபிடி!

‘செடி, கொடி, மரம்’ பாடத்துக்கு உரியது.

‘‘நீங்கள் எந்த மரத்தின் விழுதைப் பிடித்துத் தொங்கி விளையாடுவீர்கள்?''

இப்படிக் கேட்டதும் சில மாணவர்கள் ‘ஆல மரம்' என்றும், சிலர் வார்த்தையின் வேறுபாடு தெரியாமல், ‘அரச மரம்' என்றும் கூறினர். இப்படி நன்கு தெரிந்த மரங்களுக்கு இடையேயான பெயர் வேறுபாட்டைக் கண்டுபிடிக்கும் செயல்பாட்டை, விளையாட்டு மூலம் செய்தேன்.

மரம், செடி, கொடி ஆகியவற்றின் பண்புகளை மாணவர்களுக்குக் கூறிவிட்டு, விளையாட்டை ஆரம்பித்தோம். நான்கு விதமான மரங்களின் இலைகளோடு இருக்கும் சின்னக் கிளைகளை, ஒரு வட்டத்தின் நடுவில் பரப்பினேன். அதைச் சுற்றி மாணவர்களை நிற்கச் செய்தேன். வட்டத்தின் ஓர் இடத்தில் சின்னக் கட்டமும் இருந்தது. இப்போது, மாணவர்களை வட்டத்தில் ஓடச்செய்து, ‘Stop' என்றதும் அப்படியே நிற்கச் சொன்னேன். ஒரு மரத்தின் பெயரை நான் சொன்னதும், கட்டத்தில் நிற்கும் மாணவர், அந்த மரத்துக்கு உரிய கிளையை எடுக்க வேண்டும். தவறாக எடுத்துவிட்டால்,  விளையாட்டில் இருந்து விலகிவிட வேண்டும். ஆட்டத்தின் கடைசி வரை இருக்க வேண்டும் எனும் ஆசையால், மாணவர்கள் மிகக் கவனமாக மரத்துக்குரிய கிளைகளை எடுத்தனர். இதன் மூலம், ஒவ்வொரு மரத்துக்கும் உரிய வேறுபாட்டை மாணவர்கள் எளிதாகத் தெரிந்துகொண்டனர்.

உங்கள் வகுப்பிலும் செய்துபார்க்கலாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்