தேங்காய் உலகம்!

‘நாம் வாழும் பூமி’ பாடத்துக்கு உரியது.

பூமியின் உள் அமைப்பானது மேல் ஓடு, புவியுறை, வெளிப்பாறைக் குழம்பு, உள்பாறைக் குழம்பு என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதை, மாணவர்கள் நன்கு புரிந்துகொள்ள, எளிமையான செயல்பாடு ஒன்றைச் செய்யலாம். 

தேங்காய், வேகவைக்கப்பட்ட பருப்பு மற்றும் கோலிக்குண்டு ஆகியவற்றின் மூலம் மாதிரியை அமைத்து, செயல்பாட்டை விளக்கலாம். தேங்காய் மூடியின் உள்ளே நன்கு வெந்த பருப்பை ஒரு படலமாகப் பூசவும். பிறகு, நடுப்பகுதியில் கோலிக்குண்டை வைக்கவும்.

1. தேங்காயின் மேல் ஓடு - மேல் ஓடு (Crust)

2. தேங்காய்ப் பருப்பு உள்ள பகுதி - புவியுறை (Mantle)

3. பருப்புப் படலப் பகுதி - வெளிப்பாறைக் குழம்பு (Outer core)

4. கோலிக்குண்டு உள்ள இடம் - உள்பாறைக் குழம்பு (Inner core)

இனி, பூமியின் அடுக்குகள் பற்றி எப்போது கேட்டாலும், மாணவர்களின் மனதில் இந்தத் தேங்காய் ஓடு வரும். எப்போதுமே மறக்க மாட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்