தொழில் வகைகள்!

‘முதன்மைத் தொழில்கள்’ பகுதிக்கு உரியது.

‘‘நேற்று ராத்திரி எல்லாரும் என்ன சாப்பிட்டீங்க?'' எனக் கேட்டேன்.

தோசை, பரோட்டா, சப்பாத்தி, சோறு என மாணவர்கள் கூறினார்கள். ‘‘வேளாண்மை நடப்பதால்தான் மனிதன் உயிர்வாழத் தேவையானவை கிடைக்கின்றன. பண்டைய கால மனிதர்கள் மேற்கொண்ட தொழில்களைப் பட்டியலிடுங்கள்'' என்றேன்.

ஒவ்வொரு தொழிலின் பெயரையும் அட்டையில் எழுதிப் பிடித்துக்கொண்டு, அந்தத் தொழில் பற்றி ஒரு நிமிடம் பேசச் சொன்னேன். மாணவர்கள் ஆர்வமுடன் சொன்னவை...

1. உணவு சேகரித்தல்: தமக்குத் தேவையான உணவினை இயற்கையிடம் இருந்து பெற்றனர். பழங்கள் மற்றும் கிழங்குகளைக் காடுகளில் இருந்து பெற்றனர்.

2. வேட்டையாடுதல்: இதன் மூலம் விலங்கின் இறைச்சி மற்றும் தோலினைப் பெற்றார்கள்.

3. மேய்த்தல்: பருவகாலத்துக்கு ஏற்ப மேய்ச்சல் நிலங்களைத் தேடி, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மந்தைகளோடு இடம் பெயர்ந்தனர்.

4. மீன்பிடித்தல்: ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நடைபெறும் முக்கியமான முதல்நிலைத் தொழிலாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்