விசை செயல்படுதல்!

‘விசையும் அழுத்தமும்’ பாடத்துக்கு உரியது.

விசையின் அழுத்தத்தை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள, செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.
மேசையின் மீது நாளிதழ் காகிதங்கள் மூன்றை  வைக்கவும்.

முதல் காகிதத்தின் மீது, ஒரு செங்கல்லை கிடைமட்டமாகப் படுக்கவைக்கவும். இரண்டாவது காகிதத்தில், ஒரு செங்கல்லை கிடைமட்டமாகப் பக்கவாட்டில் வைக்கவும். மூன்றாவது காகிதத்தின் மீது ஒரு  செங்கல்லை, செங்குத்தாக நிற்கவைக்கவும்.

இரண்டு மாணவர்கள் எதிரெதிராக நின்றுகொண்டு, செங்கல் வைக்கப்பட்ட காகிதத்தை இருபுறமும் தூக்க வேண்டும். முதல் வகைச் செங்கல்லை சுலபமாகவும் இரண்டாவது வகைச் செங்கல்லை சிரமப்பட்டும் தூக்கமுடிகிறது. ஆனால், மூன்றாவது செங்கல்லைத் தூக்க மிகுந்த சிரமப்படவேண்டும். காரணம் தெரியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்