இந்தியாவின் ஹாக்கி கடவுள்!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம்

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் சிங் பிறந்த நாளைத்தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடுகிறோம். ஆகஸ்டு 29, 2012-ம் ஆண்டில், தயான் சந்தின் 108-வது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நாளில் விளையாட்டுகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு... அர்ஜுனா, துரோணாச்சார்யா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய விளையாட்டு தினமாக, ஒரு விளையாட்டு வீரரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்றால், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

சச்சின் எப்படி கிரிக்கெட் கடவுளோ, அதுபோல ஹாக்கியில் தயான் சந்த். நிகரற்ற பல சாதனைகள் படைத்தவர். உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் 1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ல் பிறந்தவர். சிறு வயதில் எங்கே போனாலும் ஹாக்கி மட்டையும் கையுமாகவே இருப்பார். நிலா வெளிச்சத்திலும் விளையாடுவார். அதனால், அவரது நண்பர்கள் ‘சாந்த்... சாந்த்' என்று அழைத்தனர். அதுவே அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டு, பின்னாளில் ‘தயான் சந்த் சிங்' என மாறியது. ‘சாந்த்' என்றால், இந்தி மொழியில் ‘நிலவு' என்று பொருள்.

இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம். ஒரு ஹாக்கி போட்டியைப் பார்க்கப்போனார் தயான். இந்தியர்கள் அணியுடன் வெள்ளையர் அணி மோதிக்கொண்டிருந்தது. இந்தியர்கள் அணியை ஊக்குவித்து ஆர்ப்பரித்தார் தயான். இதைப் பார்த்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவர், ‘உன்னால் விளையாட முடியுமா?' என தயானிடம் சவால் விடுத்தார். சவாலை ஏற்று களம் இறங்கிய தயான், வெள்ளையர் அணிக்கு எதிராக 4 கோல்களை அடித்து மிரளவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்