புதிர் பக்கங்கள்

சோட்டா பீம் அவனது நண்பர்களோடு சுற்றுலா செல்ல ரயில் நிலையத்தை அடைந்தான். அவர்களுக்குத் தேவையான தின்பண்டங்களை சுட்கி எடுத்து வந்தாள். லட்டுப் பிரியனான சோட்டா பீம், ‘‘எனக்குப் பிடித்த லட்டுக்களை கொண்டுவந்திருக்கிறாயா?’’ எனக் கேட்டான்.

‘‘ஆம்! என் அம்மா அனைவருக்கும் லட்டுக்களை கொடுத்து இருக்கிறார்'' என்றள் சுட்கி.

அனைவரும் வாயைப் பிளந்து, ‘‘எவ்வளவு லட்டுக்கள் கொண்டுவந்திருக்கிறாய் சுட்கி?'' எனக் கேட்டனர்.

‘‘உங்களுக்கு ஓரு புதிர் போடுகிறேன். அதைவைத்து கண்டுபிடியுங்கள்’’ என்றாள் சுட்கி.

சுட்கியின் அறிவுத்திறனை நன்கு அறிந்த பீமும் அவனது நண்பர்களும், லட்டுக்களை உண்ணும் பேரார்வத்தில் அவளது சவாலை ஏற்றனர். சுட்கி கூறத் தொடங்கினாள்...

“என்னிடம் இருக்கும் லட்டுக்களை இரண்டு இரண்டாக எடுத்தால், ஒன்று மீதம் இருக்கும். மூன்று மூன்றாகவோ, நான்கு நான்காவோ, ஐந்து ஐந்தாகவோ, ஆறு ஆறாகவோ எடுத்தாலும் ஒன்றுதான் மீதம் இருக்கும். ஆனால், ஏழு ஏழாக எடுத்தால் ஒன்றுகூட மீதம் இருக்காது. எனில், என்னிடம் எவ்வளவு லட்டுக்கள் உள்ளன?” எனப் புன்னகைப் புரிந்தாள். 

 சுட்கியின் புதிருக்கு பதில் அளித்து பீமுக்கும் அவனது நண்பர்களுக்கும் லட்டுக்களை உண்பதற்கு உதவுங்களேன்.

 - இரா.செங்கோதை, கணித ஆசிரியை, பை கணித மன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick