நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்! | Students create Comics Book EDWARD HUGE HANDS - Chutti Vikatan | சுட்டி விகடன்

நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!

க.பாலாஜி, படங்கள்: பா.காளிமுத்து

‘‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரஃப் நோட்ல ஜாலியா ஆரம்பிச்சது. இப்படி அட்டகாசமான புத்தகமா மாறி இருக்கிறதைப் பார்க்கிறப்போ அவ்வளவு சந்தோஷமா இருக்கு’’ - துள்ளும் உற்சாகத்துடன் சொல்கிறார்கள் கேஷவ்ராம் மற்றும் தானோதி அ.கணேஷ்.

சென்னை, சின்மயா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இருவரும், எட்வர்டு ஹியூஜ் ஹேண்ட்ஸ் (EDWARD HUGE HANDS) என்ற காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

“எனக்கு கதைகள் படிக்கவும் எழுதவும் அவ்வளவு பிடிக்கும். துப்பறியும் சாம்பு கதைகளை விரும்பி படிப்பேன். ரொம்ப நாளாவே நானும் என்னோட ஃப்ரெண்டும் ஒரு காமிக் ஸ்டோரி பண்ணணும்னு பேசிட்டு இருந்தோம். ஒரு நாள், தானோதி அவங்க ரஃப் நோட்டுல வரைஞ்சு இருந்த டிராயிங்ஸைப்  பார்த்தேன். க்யூட்டாவும் ஃபன்னாவும் இருந்துச்சு. உடனே, ‘நான் எழுதற காமிக் கதைக்கு நீதான் இல்லஸ்ட்ரேட். எனக்கு வரைஞ்சு கொடுப்பியா?’னு கேட்டேன். அப்படித்தான் ஆரம்பிச்சது இந்தக் கதை’’ என்று புன்னகைக்கிறார் கேஷவ்ராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick