Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூத்துக்கட்டி ஆட வந்தோம்!

தந்தனத்தோம் என்று சொல்லியே...

ங்கள் பள்ளியில் இந்தப் பாடலை கூத்துக் கலைஞர் தனவேல் பாட ஆரம்பித்ததும், உற்சாகமாக நாடகம் பார்க்கத் தயாரானோம். அணுகம்பட்டு ராஜதுரை பெண் வேடமிட, வைபாளையம் செல்வராஜ், தோப்புக்கொல்லை முருகன் ஆகியோர் தவில் வாசிக்க, ‘கர்ணன்’ நாடகம் எங்கள் அனைவரையும் கட்டிப்போட்டது. நாடகம் முடிந்ததும் கூத்துக் கலைஞர் தனவேலுவோடு பேசினோம்.

‘‘அய்யா, உங்களுடைய நாடகக் குழு பற்றி சொல்லுங்க’’

‘‘நெய்வேலி அருகே இருக்கும் வடக்கு மேலூரில் ‘வாழியம்மன் நாடகக் குழு’ என்ற பெயரில் எங்கள் நாடகக் குழுவை நடத்திவருகிறோம்.’’

‘‘பொதுவா, தெருக்கூத்து நடத்தும் இடம் எது?’’

‘‘இதுதான் இடம் என்று இல்லை. கதைகளின் அடிப்படையில்... கோயில்கள், திருவிழாக்கள், கிராமங்கள், குலதெய்வ வழிபாட்டுத் தலங்கள் எனப் பல இடங்களிலும் நடத்துவோம்.’’

‘‘எந்த மாதிரியான கதைகள் பண்ணுவீங்க?’’


‘‘ராமாயணம், மகாபாரதம், குலதெய்வங்கள், விசேஷ தெய்வங்களின் கதைகள்.’’

‘‘என்னென்ன இசைக் கருவிகளைப் பயன்படுத்துவீங்க?’’

‘‘ஆர்மோனியம், தபேலா, டோலக்.’’

‘‘தெருக்கூத்தால் மக்களுக்கு என்ன பயன்?’’

‘‘தெருக்கூத்து மூலம் நன்னெறிகளைக் கூறுவதால், பார்வையாளர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும். நமது இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றைப் படிக்காத பாமரர்களும் எளிமையாகப் புரிந்துகொள்வார்கள்.’’

‘‘உங்களுடைய குரு யார்?’’

‘‘நல்லிகுப்பத்து சின்னத்துரை மற்றும் தேவந்தூர் ராமசாமி. ஒவ்வொரு முறை வேஷம் கட்டும்போதும் இவர்களை நினைத்துக்கொள்வேன்.’’

‘‘நீங்கள் எத்தனை ஆண்டுகளாகத் தெருக்கூத்து நடத்துகிறீர்கள். வேறு ஏதாவது தொழில் செய்கிறீர்களா?’’

“நான் 25 வருடங்களாக தெருக்கூத்தில் இருக்கிறேன். இது மட்டும்தான் பொழப்பு.  வேறு வேலைகள் தெரியாது.’’

‘‘போதுமான வருமானம் கிடைக்கிறதா?’’

‘‘இரவு, பகல் பார்க்காமல் ஆடினாலும், நல்ல வருமானம் கிடைப்பது இல்லை. இது அழிந்து வரும் கலையாக இருக்கிறது. எல்லா வீட்டிலும் இப்போ டி.வி வந்துடுச்சு.  அதனால்  தெருக்கூத்து முடங்கி இருக்கு. ஆனால், என்றைக்கும் அழியாது. அரசாங்கம் இதனை ஊக்குவிக்க வேண்டும்.’’

‘‘உங்கள் மகனை கூத்துக் கலைஞராக உருவாக்குவீர்களா?’’

‘‘உங்களோடு இதே பள்ளியில் படிக்கும் பாலமுருகன்தான் என் பையன். நடிக்கிறதா, வேணாமானு அவன்தான் முடிவு பண்ணணும்.’’

‘‘எங்களைப் போன்ற மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?’’

‘‘தெருக்கூத்து அற்புதமான கலை. அது, நாளும் உயரணும். தெருக்கூத்து பார்த்து, அதில் உள்ள கருத்தைக் கேட்டு, மக்கள் நல்ல உணர்வோடு வாழணும். பள்ளிக்கூட மாணவர்கள் எப்போதும் டிவியையே பார்த்திட்டு இருக்காமல், இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்க்கணும். கூத்துக் கலைஞர்களைப் பற்றி தெரிஞ்சுக்கணும்.’’

‘‘எங்க ஊருக்கு தெருக்கூத்து ஆட வருவீங்களா?’’

‘‘நிச்சயமா வருவோம். நீங்க எல்லாரும் இப்படி துடிப்போடும் ஆசையோடும் ரசிப்பதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தக் கூத்துக் கலை அழியாது என்ற நம்பிக்கை ஏற்படுது.’’

 

- த.பாலமுருகன், வி.விக்னேஷ், நந்தினி, பிரசன்ன வெங்கடேஷ், தமிழரசி, உமாமகேஷ்வரி, மோகனசுந்தரம், திரிசங்கு, சம்பத் குமார், சுவேதா, சுஜிதா.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கிரீன் சல்யூட்!
டாப் 10 ஆப்ஸ் 10
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close