Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டார்வின் சில குறிப்புகள்!

பிப்ரவரி 12 டார்வின் தினம்

சிறு வயதிலேயே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அது குறித்து ஆய்வுசெய்வார். அப்பாவின் ஆசைக்காக மருத்துவம் படித்தாலும் அதில் கவனம் செல்லவில்லை.

கேலகாஸ் தீவுகள், ஐரோப்பிய தீவுகள் என ஐந்து ஆண்டுகள் பயணம் செய்து, சேகரித்த விலங்குகள் மற்றும் பறவைகளின் எலும்புகளை  ஆய்வுசெய்து, ‘The voyage of the Beagle’ என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.

சார்லஸ் டார்வின், இங்கிலாந்தின் ஷ்ரூஸ்பரி (Shrewsbury) என்னும் இடத்தில், பிப்ரவரி 12, 1809-ல்  பிறந்தார். தந்தை, ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்.

கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிடைத்தது. 1831 டிசம்பர்  27-ல், தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய, எச்எம்எஸ் பீகிள்  (HMS Beagle) என்ற கப்பலில், ஃபிட்ஸ்ராயோடு பயணம் செய்தபோது டார்வினுக்கு வயது 22.

30-வது வயதில் எம்மா வெட்ஜ்வுட் (Emma Wedgwood) என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்த டார்வினுக்கு, ஏழு குழந்தைகள்.

இயற்கையியலார் ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்பவரின் நட்பு ஏற்பட்டது. ஜூலை 1, 1858-ல் டார்வினின் கண்டுபிடிப்புகளும், வாலஸின் கட்டுரையும் லண்டனின், லின்னன் கழகத்தில் வாசிக்கப்பட்டன.

டார்வினின் பரிணாம  விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்குமே அது பொருந்தும் என்று நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.

1859-ம் ஆண்டில், ‘இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species by Natural Selection) என்ற  நூலை வெளியிட்டார்.

மாறுதல் (பரிணாம வளர்ச்சி), மரபு வழி, உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் என்பதே டார்வின் கோட்பாடுகளின் முக்கிய அம்சங்கள்.

சார்லஸ் டார்வின், 1882 ஏப்ரல் 19-ல் இறந்தார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

- யுவா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மணக்கும் மருங்கூர் முந்திரி!
ஒரு புடியா... ரெண்டு புடியா!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close