மாற்றி மாற்றி யோசிப்போம்!

‘‘நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரலை?’’னு மிஸ் கேட்கும்போது, கற்பனைக்கு சிறகு முளைத்து, புதுப்புது ஐடியாவா தோணும். ஆனா, அதையெல்லாம்  அவங்ககிட்டே சொல்ல முடியுமா? அதனால், உங்ககிட்டே சொல்றோம்.

ஸ்கூலுக்கு கரெக்ட்டா வரணும்கிற பதற்றத்துல  எந்த பஸ்னு கூட சரியா பார்க்காம, வெளியூர் பஸ்ல ஏறி, ஊட்டிக்குப் போயிட்டேன் மிஸ்!

மிஸ், பெருமழையில்   எங்க ஊர் ரோட்டையே காணும். அதைத் தேடிக் கண்டுபிடிச்சு, அதோட இடத்துல சேர்க்கவே ஒரு    நாள் ஆச்சு!

ஒரு குதிரை வண்டியில ஏறினேன். குதிரைகிட்ட ‘என்னை ஸ்கூல்ல விட்டுரு’னு சொல்லிட்டு நம்பிக்கையோடு தூங்கிட்டேன். கண்முழிச்சுப் பார்த்தா, ‘பெட்’லருந்து கீழே விழுந்துகிடக்கிறேன். குதிரை கவிழ்த்திருச்சு மிஸ்!

சந்தைக்குப் போனேன் மிஸ், மாட்டைத் தடவிக்கொடுத்தேன். அது, முட்டுறதுக்குத் துரத்த, இந்தியா பார்டர் தாண்டி ஓடிட்டேன் மிஸ்!

மேடம், சைக்கிள்ல வேகமா ஸ்கூலுக்கு வந்துட்டு இருந்தேனா, டிராஃபிக் போலீஸ் ‘ஸ்டாப்’னு கையைக் காட்டிட்டு வேற பக்கம் போயிட்டார். போனவர் வரவே இல்லை. அங்கேயே இருந்துட்டேன்!

மிஸ், நான் வீட்டுல இருந்து ஏர் பலூன்ல கிளம்பினேன். வழியில காத்து போய்டுச்சு. திரும்பவும் காத்தடிச்சு முடிக்கிறதுக்குள்ள ஸ்கூல் டைம் முடிஞ்சுடுச்சு!

சித்தி வீட்டுல விசேஷம் மிஸ். பிரியாணி விருந்து.    கோழிகிட்டே கெஞ்சிக் கூத்தாடி,   சித்தி வீட்டுக்கு கூட்டிட்டுப்போய் விடுறதுக்குள்ள நேரம் ஆகிடுச்சு!

- அருள்மொழி, வான்மதி, லியோ, சங்கீதா, தமிழரசி, பிரியதர்ஷினி, ஜெயந்தன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick