Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடாளுமன்றத்தில் திருக்குறள்!

‘‘உலகம் போற்றும் திருக்குறளுக்கு எத்தனையோ மகுடங்கள் கிடைத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள் நிகழ்வு. அந்தப் பெருமைமிகு நிகழ்வில் நாங்கள் இருந்திருக்கிறோம் என்பது எங்களுக்குக் கிடைத்த வரலாற்று வாய்ப்பு” என்கிறார்கள் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயிலைச் சேர்ந்த ஆஸ்மி ஜெனிஃபர் மற்றும் ஜே.எஸ். மேத்தா.

திருக்குறளைப் போற்றும் வகையில்,  கடந்த டிசம்பர் 17-ம் தேதி, ‘திருக்குறள் திருவிழா’ என்ற தமிழ் விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மாணவர், இளைஞர் திருவள்ளுவர் மன்றத்தின் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தருண் விஜய் முயற்சியால், ‘திருக்குறள் முற்றோதல் மற்றும் திறனாய்வுத் தேர்வு’  என்ற போட்டி, நவம்பர் மாதம் தொடங்கியது. மதுரையில் நடைபெற்ற முதல் சுற்றில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 50,000 பேர் கலந்துகொண்டார்கள்.

‘‘திருக்குறளை வாழ்வியலோடு ஒப்பிடும் நோக்கில் நடந்த எழுத்துத் தேர்வில், 90 கேள்விகள் கேட்டார்கள். மாணவர்களின் நினைவுத்திறன், உச்சரிப்புத் திறனைச் சோதிக்கும் வகையில் வாய்மொழித் தேர்வும் நடைபெற்றது. இதில் சிறப்பான மதிப்பெண் பெற்று, தமிழகத்தில் இருந்து 133 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் வெற்றிபெற்றோம். நான், பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்றேன்” என்கிறார் காரைக்குடி, கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியும் நமது சீனியர் சுட்டி ஸ்டாருமான பானுப்ரியா.

‘‘வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பரிசும் பாராட்டும் அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றார்கள். தமிழின் பெருமையையும் திருக்குறளின் பெருமையையும் பற்றி அவர்கள் பேசியதை மறக்க முடியாது.” என்கிறார் காரைக்குடி, எஸ்.எம்.எஸ்.வி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சூரிய பிரகாஷ். இவர், சுட்டி விகடனின் இந்த வருட சுட்டி ஸ்டார்.

‘‘இந்தப் போட்டியில் பங்கேற்று நாடாளுமன்றம் சென்று பரிசு பெற்ற சுட்டிகளில் பலர், நமது சுட்டி விகடனின் வாசகர்கள் மற்றும் சுட்டி ஸ்டார்கள் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. அவர்களில் ஒருவர் எங்கள் பள்ளி மாணவரான ஹரி மகேஸ்” என்கிறார் சேலம், ஹெலிக்ஸ் சிறப்பு பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார்.

இது, அய்யன் வள்ளுவனுக்குப் பெருமை சேர்த்த அற்புத விழா!

 

 

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ரா.ராம்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மண்ணைக் காக்கும் சின்ன விஞ்ஞானி!
கே.ஜி.க்ளிக்ஸ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close