Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"காரைக் கட்டி இழுப்பேன் கேரம் சுண்டி ஜெயிப்பேன்!"

-சகலகலா அபிநயா

‘‘தெருவுல பசங்க விளையாடும் கிரிக்கெட்ல அஞ்சு நிமிஷம், கொஞ்சம் தள்ளி நொண்டி விளையாடும் பெண்களோட அஞ்சு நிமிஷம்னு எந்த விளையாட்டா இருந்தாலும் உள்ளே புகுந்து ஒரு கை பார்த்திடுவேன். அந்த கே.ஜி காலத்துப் பழக்கம்தான் சாம்பியன்ஷிப் வரைக்கும் வந்திருக்கு’’ என்கிறார் அபிநயா.மதுரை, ஸ்ரீ அரபிந்தோ மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அபிநயா, கேரம் போட்டிகளில் தேசிய அளவில் தொடர் சாதனை படைத்து வருகிறார். அவரோடு பேசினோம்.

‘‘ஆரம்பத்துல கேரம் விளையாட்டு மேல பெரிய ஆர்வம் இல்லை. ஏன்னா, கராத்தே மற்றும் த்ரோ பால் விளையாட்டுல துறுதுறுனு ஓடிட்டு இருந்தேன். த்ரோபால்ல ஸ்டேட் லெவல் போட்டிகள்ல வின் பண்ணி இருக்கேன். அதைவிட கராத்தே மேல பயங்கர கிரேஸ். காரணம், ‘யா... ஹூ’னு சவுண்டு கொடுத்துக்கிட்டு அட்டாக் பண்றது, ஓடுகளை உடைக்கிறதுனு டி.வி-யில் பார்த்ததை நாமும் செய்யணும்னு கராத்தே வகுப்புக்குப் போனேன். இப்போ நானும் ஓடுகளை உடைக்கிறேன்.’’ என்கிற அபிநயா, கராத்தேயில் கிரீன் பெல்ட்.

இவரது அப்பா ஒரு கார் மெக்கானிக். அங்கு வரும் பல வகை கார்களைப் பார்த்ததும் புதிதாக ஓர் ஆசை வந்திருக்கிறது.

‘‘காரை கயிற்றில் கட்டி, பற்களால் இழுக்கும் ஆசைதான் அது. கராத்தே மாஸ்டர்கிட்டே சொல்லி, அதற்கும் பயிற்சி எடுத்தேன். ஸ்கூல்ல ஒவ்வொரு வருஷமும் நடக்கிற ஸ்போர்ட்ஸ் டே ஃபங்ஷன்ல நான் கார் இழுக்கிறதுக்கு டைம் ஒதுக்கிடுவாங்க. ஓஹோ... மெக்கானிக் ஷாப்புக்கு வர்ற கார்களைக் கட்டி இழுக்கிறீங்களானு யோசிக்காதீங்க. இதுவரைக்கும் என் அப்பாவின் சொந்தக் காரை மட்டும்தான் கயிற்றில் கட்டி பற்களால் இழுத்திருக்கேன்” எனச் சிரிக்கிறார் அபிநயா.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்தித்தாளில் வெளியான கேரம் போட்டி ஒன்றைப் பார்த்திருக்கிறார் அபிநயா. அங்கே ஆரம்பித்தது கேரம் ஆர்வம்.

‘‘அது, சின்ன ஜோனல் மேட்ச். திடீர்னு முடிவு பண்ணிதான் அதுல கலந்துக்கிட்டேன். ஃபர்ஸ்ட் ரவுண்டு மட்டும்தான் வந்தேன். நான் விளையாடுறதைக் கவனிச்ச மாஸ்டர் ஒருத்தர், ‘உனக்கு ஷாட் நல்லா வருது. இன்னும் டிரெய்னிங் எடுத்தா பெருசா வரலாம்’னு சொல்லிட்டார். இந்த ஒரு வார்த்தை போதாதா? கராத்தே, த்ரோபால்ல இருந்து யு டர்ன் போட்டு, கேரம் பக்கம் போனேன்’’ என்கிறார்.

2013-ம் வருடம் நடந்த ‘அண்டர் 12 கேரம் சாம்பியன்ஷிப்’ போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெற்று, தேசியப் போட்டிக்குத் தேர்வானார்.

 

‘‘போபாலில் நடந்த, நேஷனல் போட்டிக்குப் போய் சில்வர் மெடல் வாங்கி வந்தேன். அடுத்த வருஷம் சட்டீஷ்கரில் நடந்த ‘அண்டர் 14 நேஷனல் கேரம் சாம்பியன்ஷிப்’ போட்டியிலும் தனிநபர் பிரிவில் சில்வர் மெடல் வாங்கினேன். குழுப் போட்டியில் தங்கம் ஜெயிச்சோம். இதுதான் என்னோட ஃபிளாஷ்பேக். இப்போ என் உலகமே சதுரம் ஆகிடுச்சு’’ என்று வார்த்தைகளால் அபிநயம் பிடிக்கும் அபிநயா, ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்திருக்கிறார்.
இப்படி பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றாலும் படிப்பிலும் பின்னி எடுக்கிறார் இந்த சகலகலா வல்லி.

‘‘படிப்பில் ‘யுவஸ்ரீ கலா பாரதி’ விருது வாங்கி இருக்கேன். அடுத்த மாசம், ராமநாதபுரத்தில் நடக்கும் நேஷனல் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் செலக்ட் ஆகியிருக்கேன். வெளி ஸ்டேட்லயே  ஷார்ட் அடிச்சிருக்கோம்... இது நம்ம ஏரியா, சும்மா விட்ருவோமா? தனிநபர் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன்’’ என்கிற அபிநயாவின் கண்களில் மின்னுகிறது நம்பிக்கை.

- மு.ராகினி ஆத்ம வெண்டி அட்டை, படங்கள்: சு.ஷரண் சந்தர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
துப்பறியும் சுட்டிகள்!
நாடாளுமன்றத்தில் திருக்குறள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close