தேசிய, மாநில அடையாளங்களை அறிவோம்!

‘வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல்’ பாடத்துக்கு உரியது.

தேவையான பொருட்கள்: மின் அட்டைகள், வண்ணப் பேனாக்கள், மாநில மற்றும் தேசியச் சின்னங்களின் படம் அல்லது பொம்மைகள்.

செய்முறை:

தேசிய மலர், தேசியக் கனி, தேசிய விலங்கு, தேசியப் பறவை, மாநிலப் பறவை, மாநில மலர், மாநில விலங்கு, மாநில மரம் என்று தனித்தனி மின் அட்டைகளில் வண்ணப் பேனாக்களால் எழுதிக்கொள்ளவும்.

தாமரை மலர், மாம்பழம், புலி, மயில், மரகதப் புறா, செங்காந்தள் மலர், நீலகிரி வரையாடு, பனை போன்றவற்றின் படங்கள் அல்லது பொம்மைகளை மேஜை மீது வைக்கவும்.

ஒரு மாணவர், ஏதேனும் ஒரு மின் அட்டையை எடுத்துக் காண்பிக்க (உதாரணமாக – தேசியக் கனி) மற்றொரு மாணவர் தேசியக் கனியான மாம்பழத்தின் படம் அல்லது பொம்மையை எடுத்துக்கொண்டு அவர் அருகில் நிற்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்