பாட்டி வைத்தியம்!

‘‘டாக்டர்கிட்டே போகணுமா? பெரிய ஊசியா போடுவாங்களே’’னு அலறும் நம்ம குரூப்பா நீங்க.  இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம். எங்கள் பள்ளி அருகே உள்ள பாட்டிகளிடம் கேட்ட சில டிப்ஸ்...

கற்பூரவல்லி (ஓமவல்லி): 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால், மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். மஞ்சள் கரிசலாங்கண்ணி: காமாலை, கண் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றுக்கு சிறந்தது. காயங்கள், புண்களுக்கு இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். துளசி: சளி, இருமல் தொல்லை நீங்க, துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்.                                                                                          

தூதுவளை: மூளை வளர்ச்சிக்கும் ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் சிறந்த டானிக் இது.

கீழாநெல்லி: ரத்தச் சோகையைக் குறைக்கும். பசியை உண்டாக்கும். வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து, காலையில் குடித்து வர குணமாகும். 

- சுஜா, எஸ்.தர்ஷனா, என்.ஸ்ரீத்தன்ராம், எஸ்.ஸ்ரீஜித், எஸ்.பி.ஹரிபிரசாத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick