ஸ்கூல் ஸ்பெஷல்!

டாக்டர் என்றாலே, கொஞ்சம் பயம்தான்.  ஆனால், எங்கள் பள்ளியின் ஸ்பெஷல் டாக்டர் எம்.முருகேசன், நண்பர் போல பழகுவார். நர்ஸ் விமலா அக்காவும் அப்படித்தான். மாத்திரை சாப்பிடச் சொல்லும்போது மட்டும் ஸ்டிரிக்ட் ஆபீஸர்.

எங்கள் பள்ளியில் மழை அளவு, தட்பவெப்பம் அளவிடும் கருவிகள் உள்ளன. அதில் அவ்வப்போது வெப்பநிலையைச் சோதிப்போம்.

மலை வாசத்தோடு வலம்வரும் காற்றை உள்ளே இழுத்துத் தேக்கி, வெளியே விடுவது நல்ல அனுபவம். எங்கள் பள்ளியில் தரப்படும் யோகா பயிற்சி, உடலையும் உள்ளத்தையும் செழுமையாக்குகிறது.

எங்கள் பள்ளியின் அறிவியல் கூடம், எங்கள் அறிவை வளர்க்கும் நவீன போதிமரம்.

2014-ம் ஆண்டு புது டெல்லியில் நடந்த குடியரசு தின  என்.சி.சி அணிவகுப்பை எங்கள் பள்ளி மாணவி எஸ்.பூர்ண விகாசினி வழிநடத்தினார்.

பல குரலில் எங்களை மகிழ்விக்கும் நிரூபன்.

காந்திய சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் எளியோர்க்கு  உதவி செய்யும் ‘காந்தி அறநெறி மன்றம்’ நடத்துகிறோம்.

விவேகானந்தரின் வீரியம்மிக்க சிந்தனைகளை மாணவர்கள் மனதில் பதித்து, தன்னம்பிக்கை வளர்க்க ‘விவேகானந்தா பயிலரங்க கல்வி மையம்’ செயல்படுகிறது.

ஆங்கில ஆற்றலை பன்முகத்தில் வளர்த்திட, ‘டிகோ மாஸ்டர்’ ஆங்கில மேடை எங்கள் ஸ்பெஷல்!

கீ போர்டு வித்தைக்காரன் எம்.ஸ்ரீஜித்

எங்களின் பிறந்த நாளில் மறக்காமல் மரம் நடுவோம். மரத்தின் அறிவியல் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுதிவைப்போம்.

நாங்கள் தங்குவதற்கு விடுதி இருப்பதுபோல, குருவிகளுக்கும் கூடுகள் அமைத்துள்ளோம்.

- ஜி.ஜெ.வர்ஷா, பி.பி.ஸ்ரீ.சூர்யா, எஸ்.ஹாரிஸ் ரூபன், ஏ.கே.அஸ்வின், ஜி.பிரவீண் குமார், வி.அக்‌ஷய் நகுல், ஏ.எஸ்.சிந்தன், என்.ஸ்ரீத்தன்ராம், எஸ்.நவீன் குமார், ஆர்.ஜெயவந்த், ஜி.எஸ்.விஸ்வராஜ், இ.கிருத்திக் வர்ஷன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick