இயற்கைக்கு அணிவித்த 'D' சர்ட்!

உங்களுக்கு D-ஷர்ட் தெரியுமா? T-ஷர்ட் கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன D ஷர்ட்?

ரொம்பவும் குழம்ப வேண்டாம். வெள்ளை T-ஷர்ட்டில், எங்களின் ஓவியத் திறமையைக் காட்டுவதே D-ஷர்ட். அதாவது, Drawing shirt. எங்கள் பள்ளி, பசுமையான இயற்கை சூழ்ந்த அழகுப் பள்ளி. இயற்கையை நாம் பாதுகாத்தால்தானே இந்த அழகு தொடரும். நம் நாட்டில் இயற்கையை ரசிக்கும் பலர், அதைப் பாதுகாக்க நினைப்பது இல்லை. இது பற்றி சுட்டி ஓவியர்களான நாங்கள் யோசித்தோம். இயற்கையைப் பாதுகாப்பது, உலக அமைதி உள்ளிட்ட கருத்துகளை ஓவியமாக வரைய முடிவுசெய்தோம். அப்போது உருவானதுதான், D-ஷர்ட் ஐடியா. எங்கள் ஓவிய ஆசிரியர் இளங்கோ, பிர்லியன்ட் ஐடியா எனப் பாராட்டியதோடு, எப்படி வரையலாம் என்று டிப்ஸ் தந்தார்.

முதலில், டி-ஷர்ட்டில் பிரைமர் பெயின்ட் அடித்து, வெயிலில் காயவைத்தோம். பிறகு, பென்சிலால் அவுட்லைன் வரைந்துகொண்டோம். பிறகு, அதற்கேற்ற வண்ணங்களைத் தீட்டினோம். இரண்டே வரிகளில் சொல்லிவிட்டாலும், இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஒவ்வொரு பகுதியையும் அழகாகத் தீட்டினோம். எங்கள் D-ஷர்ட் படைப்புகள் உங்களுக்குப் பிடிச்சிருக்கா ஃப்ரெண்ட்ஸ்?

- ச.வி.வித்யாசரண், மா.நெளமிகா, செ.பாண்டி மீனாட்சி, சே.ஹர்ஷனா, இனியா இளங்கோ, ரா.பொ.சர்வேஸ்வரன், ச.ஸ்ரீ.வர்தன், வ.கு.இலக்கியா, ஈ.மோ.ஆஹர்ஷனா, மா.முகுந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick