Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாப் 10 ஆப்ஸ் 10

தினமும் ஏழு நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். அதற்காக, தினமும் உங்களைத் தயார்படுத்துகிறது ‘7 Minute Workout’ என்ற இந்த ஆப். உங்களது உடற்பயிற்சிப் பழக்கத்தை ஒழுங்குபடுத்தி, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.https://play.google.com/store/apps/details?id=com.popularapp.sevenmins

பியானோ கற்றுக்கொள்ள ஆசையா? ‘Piano +’ ஆப் வரவேற்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை, அதற்குரிய நோட்ஸ்களோடு வாசிக்கலாம். ஒவ்வொரு கீயையும் வித்தியாசப்படுத்திப் புரிந்துகொள்ளலாம். மிட் கீபோர்டுகளை யுஎஸ்பி வழியாக இணைக்கும் வசதியும் உள்ளன.https://play.google.com/store/apps/details?id=com.rubycell.pianisthd

மார்வெல் காமிக்ஸ்களின் அவெஞ்சர்ஸ் குழு, எக்ஸ்-மென், ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களோடு இணைந்து  சாகசங்கள் செய்ய ஆசையா? உங்களை வரவேற்கிறது, Avengers Alliance ஆப். டவுண்லோடு செய்து, சாகசம் புரியுங்கள்.https://play.google.com/store/apps/details?id=com.marvel.avengersalliance_goo

சுடோகு, குறுக்கெழுத்துப் புதிர்கள் போல  மூளைக்கான விளையாட்டு, Blendoku. எண்களுக்குப் பதிலாக, நிறங்கள். ஒரு கட்டத்தில் உள்ள நிறத்துக்கு, அடுத்த கட்டத்தில் என்ன நிறம் வரும் எனக் கண்டுபிடிப்பதன் மூலம் நிறங்கள் பற்றிய புரிதல் வளரும்.https://play.google.com/store/apps/details?id=com.lonelyfew.blendoku

ஒரு துணியில் வெவ்வேறு நிறங்களில் பட்டன்கள் தைக்கப்பட்டு இருக்கும். நீளவாக்கில், குறுக்குவாக்கில் இருக்கும் ஒரே நிறத்திலான பட்டன்களைத் தேர்ந்தெடுத்து வெட்ட வேண்டும். அதுதான் Buttons and Scissors ஆப். எத்தனை குறைவான முறைகளில் வெட்டி எடுக்கிறோமோ, அத்தனை பாயின்ட்ஸ் கிடைக்கும்.https://play.google.com/store/apps/details?id=com.kyworks.buttonsandscissors.inapp

ஒரு திறமை வாய்ந்த ஓவியரைப் போல ஓவியம் தீட்ட, தரமான பிரஷ்கள் தேவை. அந்த பிரஷ்கள் வெவ்வேறு அளவு, அழுத்தங்கள் அளிக்கக்கூடியதாக இருந்தால்தான், அழகான ஓவியம் உருவாகும். அதுபோன்ற ஓவியங்களை உருவாக்க, டிப்ஸ் மற்றும் பிரஷ்களை இந்த Brushes ஆப் மூலம் பயன்படுத்தி, ஓவியங்களை உருவாக்கலாம். https://itunes.apple.com/us/app/brushes-3/id545366251?mt=8&uo=4&at=10l4CB

அரசியல் தலைவர், நடிகர், விளையாட்டு வீரர் எனப் பிரபலமானவரை நினைத்துக்கொள்ள வேண்டும். Akinator the Genie ஆப்பில் உள்ள பூதம் கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் சொல்லும் பதில்கள் மூலம் மனதில் நினைத்தவரைக் கண்டுபிடித்துவிடும். ஒபாமா முதல் நடிகர் சந்தானம் வரை கணிக்கும் பூதம் இது.https://play.google.com/store/apps/details?id=com.digidust.elokence.akinator.freemium

நுண்ணறிவை அளவிட உதவும் IQ-வை கண்டறிவதற்கான சோதனைகள், புதிர்கள் போன்றவை அடங்கிய What’s My IQ? என்ற ஆப், கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் விடைகளையும், சிந்திக்கும் திறனையும் கணிக்கும். அதற்கேற்ப மதிப்பிட்டு, உங்கள் நுண்ணறிவின் ஈவு அளவினைச் சொல்லும். https://play.google.com/store/apps/details?id=com.orangenose.games.whatsmyiq

பற்களை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்? எப்படிச் சுத்தமாக்குவது? அது உங்களை எப்படி மாற்றும் எனப் பல விஷயங்களை அழகான அனிமேஷனோடு காட்டும், ‘Duckie Deck With Teeth’ ஆப், உங்களை புன்னகை இளவரசன், இளவரசி ஆக்கும்.https://play.google.com/store/apps/details?id=com.duckiedeck.withTeeth

வானில் காணும் நட்சத்திரங்களின் பெயர்களை அறிய உதவும் ஆப், Star Chart. இந்த ஆப் மூலம் கேமரா வழியாக வானத்தைப் பாருங்கள். உங்கள் முன்னால் கண் சிமிட்டும் நட்சத்திரங்களை, விரல்களால் ஸ்க்ரீனில் தேயுங்கள். அது, என்ன நட்சத்திரம் என்கிற  தகவலைச் சொல்லிவிடும்.https://play.google.com/store/apps/details?id=com.escapistgames.starchart

- இனியன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நேரம் சொல்லும் பறவைகள்!
எங்கள் பள்ளி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close