ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்!

ங்கள் பள்ளியின் பெயர், இந்திய அளவில் தெரிவதற்கு முக்கியக் காரணம், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளைத் தட்டி வரும் இந்த நட்சத்திரங்களே. தேசிய ஹாக்கி போட்டிகளில், எங்கள் பள்ளியிலிருந்து 18 வருடங்களில் 400 மாணவர்கள் கலந்துகொண்டவர்கள். இலங்கை, மலேசியா நாடுகளில் நடந்த போட்டிகளில் வென்றுள்ளனர். அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் மதுமதி, இந்திய அளவில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்மண்டல ஹாக்கி போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் எங்கள் பள்ளியில் நடந்துள்ளது. கிரிக்கெட்டில் சங்கமேஸ்வரர், நிஷாந்த் ஆகியோர் மாநில அளவில் விளையாடி வருகின்றனர். பெண்கள் கிரிக்கெட் அணிக்கு அனுசுயா தயாராகி வருகிறார். பேஸ்கட் பால், டென்னிஸ், ஷெட்டில் கார்க், பேட்மிட்டன் என அனைத்து விளையாட்டுகளில் கலக்கி வருகிறோம்.

ஹாக்கி கோச்: யோகானந்த், டி.பி.அனிதா, பேஸ்கட் பால் கோச்: எம்.சரபோஜி, மல்லிகா, டென்னிஸ் கோச்: டி.கார்த்திக், பேட்மிட்டன் கோச்: ராஜா முகம்மது, கிரிக்கெட் கோச்:      ஜி. சிவாஜி ஆகியோரின் பயிற்சியும் எங்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பி.செந்தில் ராஜ்குமாரின் வழிகாட்டலிலும் இன்னும் பல வெற்றிகளைக் குவிப்போம்.

- ச.வெ.அமிர்தா, ரா.கௌசிக் ரிஷி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick