Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்களுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கு!

"நாங்களும் எவ்வளவோ சினிமா பார்த்துட்டோம். படத்தில் ஹீரோவோ, ஹீரோயினோ அவங்க லைஃப்ல நடந்த ஒரு விஷயத்தை உருக்கமான ஃப்ளாஷ்பேக் மூலம் சொல்றாங்க. நிஜத்திலும், வீட்டில் இருக்கிற அப்பாவும் அம்மாவும் திடீர் திடீர்னு ஃப்ளாஷ்பேக்கில் மூழ்குறாங்க. அதென்ன பெரியவங்களுக்கு மட்டும்தான் ஃப்ளாஷ்பேக் இருக்குமா? எட்டு வயசுல இருக்கிற ஒரு சுட்டிக்கு, நாலு வயசில் நடந்த ஃப்ளாஷ்பேக் இருக்காதா? அதை ஏன் யாருமே பதிவு பண்றதில்லே?’’ எனக் கேட்ட இந்தச் சுட்டிகள், வான்டடாக டைம் மெஷினில் ஏறி இருக்காங்க. அவங்களோட ஃப்ளாஷ்பேக் ஸ்டோரிகளைப் பார்க்கலாம் வாங்க...

‘‘எனக்கு டெடி பொம்மைனா உயிர். ரொம்ப நாளா கேட்டு, அப்பா வாங்கித் தந்த இவனுக்கு ‘டோலு’னு பேர் வெச்சேன். அடுத்த நாளே காணலை. எனக்கு பயங்கர அழுகை. மூணாவது நாள் ஸ்கூல் விட்டு வந்து பார்த்தால், கட்டில்ல படுத்திருக்கான். பக்கத்து வீட்டு பாப்பாதான் எடுத்துட்டுப் போயிருக்கு. அடுத்த நாளே அவங்க ஃபேமிலியோடு ஊருக்குப் போய்ட்டதால, அந்த வீட்டுக்குள்ளே தனியா இருந்திருக்கான். பாவம் என்னோட டோலு!’’  

‘‘சம்மர் லீவுக்கு எங்க ஃபேமிலி,கொலிக் ஃபேமிலியோடு தீம் பார்க்போனோம். அங்கே ‘உனக்கு ஸ்விம்மிங் தெரியுமா?’னு கொலிக் கேட்டாங்க. அன்னிக்குதான் லைஃப்லயே முதல் தடவையா ஸ்விம்மிங்பூலைப் பார்க்கிறேன் என்பதை மறைச்சு, தெரியும்னு கெத்தா இறங்கிட்டேன். இடுப்பு வரைக்கும்தான் ஆழம் இருந்துச்சு. கடைசி வரைக்கும் ஸ்விம்மிங் பண்ற மாதிரி நான் நடிச்ச நடிப்புக்கு, ஆஸ்கர் கிடைக்கலையேனு கவலையா இருக்கு!’’ 

“ஃபோர்த் ஸ்டாண்டர்டு படிச்சப்போ, ஸ்கூல் கிறிஸ்துமஸ் டே விழாவுக்கு வந்த சான்ட்டா க்ளாஸ், எங்ககூட ஜாலியா டான்ஸ் ஆடினார். ‘நீ நல்லா டான்ஸ் பண்ணினே. அடுத்த முறையும் சேர்ந்து ஆடலாம்’னு எனக்கு ஸ்பெஷலா கை கொடுத்தார். பட், நான் வேற ஸ்கூல் வந்துட்டதால, அப்புறம் அவரைப் பார்க்கவே இல்லை.’’

“ஒருநாள் அப்பாவும் அம்மாவும் கல்யாணத்துக்குப் போயிருந்தாங்க. ‘மிட்நைட் ஆகிரும். பக்கத்து வீட்டுல இருடா’னு சொன்னாங்க. ‘நான் என்ன குழந்தையா? தனியா இருப்பேன்’னு பந்தாவா சொல்லிட்டு, டி.வி-யில் படம் பார்க்க ஆரம்பிச்சேன். திடீர்னு பாத்ரூம்ல யாரோ நிற்கிற மாதிரி கதவு  சந்துல தெரிஞ்சது. இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிட்டேன். பாத்ரூம்ல தொங்கின டவல்தான் அது’னு காலையில தெரிஞ்சது. இதுல, ‘பையன் தைரியமா தனியா  இருந்துட்டான்னு வேற பாராட்டு.’’

“வைல்டு அனிமல்ஸில் யானையை மட்டுமே கோயில்ல பார்த்திருக்கிற நான், ஒரு தடவை ஜூவுக்குப் போனேன். சிங்கம் இருக்கிறதா சொன்ன பகுதியில் ரொம்ப நேரம் நின்னு பார்த்தும், அது கண்ணுலயே படலை. கிளாஸில் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே இதைச் சொல்ல முடியுமா? சிங்கத்தை ரொம்பப் பக்கத்துல பார்த்த மாதிரி தலைமுடியில் ஆரம்பிச்சு கால் நகங்கள் வரை, வர்ணிச்சுத் தள்ளினேன். ஹலோ சிங்கம் சார், அடுத்த முறை வரும்போதாவது கண்ணுல படுங்க சார்.’’

‘‘ஸ்கூல் டே ஃபங்ஷன்ல பாரதியார் வேஷம் போட்டு, நான் பேசப் பேச, மீசை கொஞ்சம் கொஞ்சமா நழுவ ஆரம்பிச்சது. சட்டுனு மீசையைக் கழட்டி, பாக்கெட்ல போட்டுக்கிட்டு, கவிதையை கன்டினியூ பண்ணினேன். எல்லோரும் சிரிச்சுட்டாங்க. புரோகிராம் முடிஞ்சதும் ‘ஏய் அசடு, மீசையை முறுக்குற மாதிரி கையை வெச்சு சமாளிக்க வேண்டியதுதானே’னு மிஸ் சொன்னாங்க. ஆனாலும், எனக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுத்ததால, சேஜா செம ஹேப்பி.’’

- ச.ஆனந்தப்பிரியா படங்கள்: சூ.நந்தினி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அன்புள்ள அஞ்சல்!
கிளாஸ் ரூம் கேம்ஸ்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close