எங்கள் பள்ளி!

சேலத்தின் சிறப்புகளில் ஒன்று, எங்களது SRK மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 2007-08 கல்வி ஆண்டு முதல் இயங்கும் இந்தப் பள்ளியில் 2,800 மாணவர்கள் படிக்கிறோம். பிரமாண்டமான கட்டடம், சிறந்த உள்கட்டமைப்பு வசதி, 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், எங்களின் கல்வி மற்றும் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். எங்கள் பள்ளியின் சேர்மன், வி.ராதாகிருஷ்ணன். பள்ளி முதல்வர்,         எஸ்.இளங்கோ. ‘Tuition Free Tension Free’ என்பதே பள்ளியின் தாரக மந்திரம். எனவே, அதிக மதிப்பெண்கள் எடுக்க, எங்கே டியூஷன் செல்வது என்ற டென்ஷன் எங்களுக்கு இல்லை. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை காலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் அறிவைப் பெருக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும் ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. பாடப்புத்தகத்தைத் தாண்டி வாசிக்கும் பழக்கம் அனைவருக்கும் உருவாக வேண்டும் என்பதற்காக, பள்ளியிலேயே புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

சூரிய மின்சக்தி (Solar System) மூலம் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் முதல் பள்ளி என்ற பெருமைக்குரியது எங்களது SRK மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. சுகாதாரமான முறையில் RO குடிநீர் வசதி,

பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத் தூய்மை மூலம் சுற்றுச்சூழல் பாதுகாத்தலில் அக்கறை எடுத்துவருகிறோம்.

‘‘உங்களுக்குள்  சகோதரத்தன்மையையும்  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.  துன்பப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டி, மிகச் சிறந்த உலகத் தலைவர்களாக (Global leaders) உருவாக வேண்டும். ‘இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது. அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்கவைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது’ என்றார் டாக்டர் அப்துல் கலாம். அப்படி உங்களுக்கான வரலாற்றுப் பக்கத்தை உருவாக்க வேண்டும். சாதித்ததைக்  கேளுங்கள், சாதிக்க வாருங்கள்.’’

இதுதான் எங்கள் பள்ளியின் சேர்மன் திரு. ராதாகிருஷ்ணன், அடிக்கடி சொல்வது. அவரின் எதிர்பார்ப்பை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். இந்தப் பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்போம்.

- ப.சக்தி சம்யுக்தா, இ.நிவாஷினி, அ.சரண், ஜீ.கார்த்திக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick