சுட்டி ஸ்டார் நியூஸ்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

செல்போன் கார்!

தைவான் நாட்டு ஆர்ட்டிஸ்ட் லின் ஷி-பா (Lin Shih -Pao), சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக, எலெக்ட்ரானிக் பொருள்களை மறுசுழற்சிசெய்து எப்படி கலைப்பொருளாக மாற்றலாம் என்பதைக் காட்ட, உலகம் முழுவதிலும் பயன்படுத்தாத சுமார், 25,000 செல்போன்களைச் சேகரித்து, நாம் பயன்படுத்தும் அளவிலான கார் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்காக, நான்கு ஆண்டுகளையும் 35 ஆயிரம் டாலர்களையும் செலவுசெய்துள்ளார்.

 

 

அடைப்பான்!

பாட்டில்களுக்கு அடைப்பானாகப் பயன்படுத்தும் தக்கை, ஒரு வகை ஓக் மரத்தின் பட்டையால்  தயாரிக்கப்படுகிறது. இது, வெப்பத்தைக் கடத்தாது, ஒளி புகாது. செயற்கைக் கைகள், கால்கள் செய்யவும் இந்த வகை மரங்கள் பயன்படுகின்றன. ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் அதிகமாக வளரும் இந்த மரங்கள், 300 ஆண்டுகள் வரை வாழும். 20 ஆண்டுகள் வளர்ந்த பிறகே, தக்கை செய்ய முடியும்.

 

 

தேள் பண்ணை!

உலகில் தேள் பண்ணைகள் உள்ள ஒரே நாடு, கியூபா. இந்த நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாகாணத்திலும் தேள் பண்ணைகளை ஆரம்பித்து, நவீன முறையில் விஷத்தைச் சேகரிக்கிறார்கள். தேளின் விஷம், முக்கியமான மருந்துகள் தயாரிக்கப்  பயன்படுத்தப் படுகிறது. கியூபா நாட்டின் தேள் விஷம், அந்த நாட்டின் வணிகத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.

 

 

 

காகிதப் பாலம்!

சீனாவின் சுஸொவ் (Susov) பகுதியில், ரேஞ்ச் ரோவர் கார்களின் 45-வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக மூன்றே நாட்களில் காகிதப் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டது.  அதன் மீது ரேஞ்ச் ரோவர் காரை விளம்பரத்துக்காக நிறுத்தியுள்ளனர். முழுவதும் மறுசுழற்சியில் உருவாக்கப்பட்ட காகிதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 2,374 கிலோ எடையில், 5 மீட்டர் நீளத்துக்கு உருவாக்கப்பட்ட இந்தப் பாலத்தின் காகிதங்கள் பசையாலோ, போல்ட்டுகளாலோ இணைக்கப்படவில்லை, காகிதங்களை நெருக்கமாக அடுக்கிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick