Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜேஷ் ஏன் ஸ்கூலுக்குப் போகவில்லை?

ராஜேஷ்: ‘‘அம்மா, நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.’’

அம்மா: ‘‘யூனிஃபார்ம் போட்டு, அழகா ரெடியாகிட்டு ஏன்டா அடம்பிடிக்கிறே?’’

ராஜேஷ்: ‘‘நான் ஸ்கூகுக்குப் போகிற வழியில், மின்னல் தாக்கும். ஆற்றைக் கடக்கும்போது, முதலை கடிச்சுடும். அதுலேர்ந்து தப்பிச்சு மலையடிவாரம் போகும்போது, பெரிய பாறை என்மேல விழுந்துடும்.’’

அம்மா: ‘‘என்ன ராஜேஷ் சொல்றே? நம்ம ஊருல ஏதுடா மலை?’’

ராஜேஷ்: ‘‘இரும்மா, நான் முழுசா சொல்லி முடிச்சுடுறேன்.பாறைக்கிட்டே இருந்து தப்பிச்சாலும், காட்டில் இருக்கும் அனகோண்டா, பெரிய வாயைத் திறந்து முழுசா முழுங்கிடும். பாம்புகிட்ட மாட்டாம ஓடி வந்தாலும், பூகம்பத்தால் ரோடு பிளந்து, பூமிக்குள் புதைஞ்சுடுவேன். இல்லேன்னா, ஏலியன்ஸ் வந்து என்னை லாலிபாப் மாதிரி சாப்பிட்டுடும். அதனாலதான் சொல்றேன். நான் ஸ்கூலுக்குப் போகமாட்டேன்மா.’’

அம்மா: ‘‘வீடியோ கேம் விளையாடி, விளையாடி உனக்கு கற்பனை ஜாஸ்தி ஆகிடுச்சு. எவ்வளவு நல்லா கதை விடுறே.’’

ராஜேஷ்: ‘‘நிஜமாவா சொல்றே? சூப்பர். எங்க டீச்சர், இன்னிக்கு ஒரு போட்டி வெச்சிருக்காங்க. யார் சூப்பரா   கிரியேட்டிவ் ஸ்டோரி சொல்றாங்களோ, அவங்களுக்கு கிப்ஃட் தருவாங்களாம். அதான், உன்கிட்ட சொல்லிப் பார்த்தேன்.’’ 

அம்மா: ‘‘நீ இவ்வளவு அழகா கதை சொல்வேன்னு இப்போதான் தெரியுது. உனக்குதான் பரிசு கிடைக்கும்.’’

ராஜேஷ்: ‘‘அப்போ, நான் ஜாலியா ஸ்கூலுக்குப் போறேன்ம்மா.’’

நடிப்பு: ராஜேஷ்வரி, ராஜேஷ்.

- ஜீ.கார்த்திக், ஏ.ஆர்.கௌஷல், எஸ். ஆதித்யா.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ALL IS WELL
புதிரோடு விளையாடு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close