Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழகர் கோயில் ஆண்டாள்!

சென்னை மக்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா போல சேலத்துக்கு குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா. ஏற்காடு மலையடிவாரத்தில் 31.73 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பூங்கா,  1981-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சேலம் மற்றும் சுற்றி இருக்கும் கிராமத்து மக்களின் விடுமுறைக் கொண்டாட்டத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

குரங்குகள், மான்கள், முதலைகள், ஆமைகள், பறவைகள் எனப் பூங்காவை ஜாலியாக ஒரு ரவுண்டு அடித்தபோது, யானைக்கு லஞ்ச் டைம். அந்த யானையைப் பார்த்துக்கொள்ளும் காளியப்பன் அண்ணா, சாப்பாடு தயாரித்துக்கொண்டிருந்தார். ‘என் பள்ளி... என் சுட்டி’ நிருபர் எனச் சொல்லிக்கிட்டு வந்துட்டோம். யானைகிட்டே பேட்டி எடுக்க முடியுமா? அதனால், காளியப்பன் அண்ணாவிடம் ஒரு மினி பேட்டி எடுத்தோம்.

‘‘இந்த யானைக்கு ஒரு ஸ்பெஷல் இருக்கு பசங்களா. இது பேரு ஆண்டாள். மதுரை, அழகர் கோயிலில் இருந்த யானை. 67 வயசாகுது. உடம்பு சரியில்லாமல், ஏழு வருஷத்துக்கு முன்னாடி இங்கே கொண்டுவந்தாங்க. நான்தான் பார்த்துக்கிறேன்.’’

‘‘இதுக்கு என்ன சாப்பாடு கொடுக்கறீங்க?’’ எனக் கேட்டோம்.

‘‘கொள்ளு, அரிசி, வெல்லம், தேங்காய் கலந்து சாப்பாடு தயாரிப்போம். காலையிலும் மாலையிலுமாக  20 கிலோ சாப்பாடு கொடுப்போம். பார்க்க இவ்வளவு பெருசா இருந்தாலும் இந்த ஆண்டாள், குழந்தை மாதிரி’’ எனச் செல்லமாகத் தடவிக்கொடுத்தார்.

அந்தக் குழந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பினோம்.

- ஜெ.கார்த்திக், எஸ்.ஆதித்யா, லோபா முத்துராஜ், ஏ.ஆர்.கெளசல், சுஹானா தாஜ்.   

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு!
தேசம் போற்றும் நேச சகோதரிகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close