Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேடி வந்த ஜோக்கர் மாமா!

‘‘குட்டிக் குட்டிச் செல்வங்களே இங்கே பாருங்க, கோமாளி நான் வந்திருக்கேன் இங்கே பாருங்க’’ என்று அந்த ஜோக்கர் மேடையில் நுழைந்ததும் ஆரம்பித்தது கலகலப்பு.

ஒரு குட்டிப் பெண் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். ‘‘முன்னாடி நாங்க ஃப்ரெண்ட்ஸோடு வெளியே போய் ஜாலியா விளையாடிட்டு இருந்தோம். எங்களோடு விலங்குகளும் சேர்ந்து விளையாடும். ஆனா, போலீஸ் வந்து எங்களை மிரட்டி, எங்க பெற்றோரிடம் பத்திரமா பார்த்துக்கச் சொல்லிட்டாங்க. எங்க அப்பா, அம்மாக்களும் வெளியே விடுறது இல்லை. வீட்டிலேயே டிவி, வீடியோ கேம்னு விளையாடி, எங்க தலைகள் பெருசாய்டுச்சு’’ என்கிறாள் அந்தக் குட்டிப் பெண்.

அங்கே வரும் பெற்றோர்கள், ‘‘எத்தனையோ டாக்டர்கிட்ட காட்டியும் தலை சரியாகலை’’ எனப் புலம்புகிறார்கள்.

‘‘குழந்தைகளை அவங்க விருப்பப்படி வெளியில் விளையாட விடுங்க. தலை சரியாயிடும்’’ என்று சொல்லிவிட்டு கோமாளி கிளம்ப, குழந்தைகள் ஜாலியா பாட்டுப் பாடி விளையாட ஆரம்பிக்கிறார்கள்.

சேலம், சோனா கல்லூரியில் நடைபெற்ற ஜே.சி.பி அமைப்பின் நிகழ்ச்சியில்தான் இந்த கலகல நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்துக்கான கதை, வடிவமைப்பு அனைத்தும் சுட்டிகளே.

இவர்களை ஒருங்கிணைத்து, கோமாளியாக நடித்த பிரபு, ‘‘நான், சேலம் மக்கள் கலைக் குழுவை நடத்தி வருகிறேன். இது, குழந்தைகளுக்குள் இருக்கும் நாடகக் கலையை வெளியில் கொண்டுவரும் ஒரு பயிற்சிப் பட்டறை. நாம் ஒரு கதை, வசனத்தை உருவாக்கி, குழந்தைகளை மனப்பாடம் செய்யவைப்பதைவிட, அவர்களையே உருவாக்கச் சொல்ல வேண்டும். அது, அவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதோடு, அவர்களின் ஆசைகள், எண்ணங்களை நமக்குத் தெரியவைக்கும்’’ என்கிறார்.

இந்தக் கதையை எழுதிய நமது சுட்டி ஸ்டார் யாழினி, ‘‘இன்றைய பெற்றோர்கள், ரெண்டு பேருமே வேலைக்குப் போவதால், பாதுகாப்புனு சொல்லி நான்கு சுவர்களுக்குள்ளேயே எங்க உலகத்தை அடக்குறாங்க. அதை, அவங்களுக்கு உணர்த்தவே இந்த நாடகம்” என அழகாகச் சிரிக்கிறார்.

- சந்திப்பு, படங்கள்: சூ.நந்தினி்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பள்ளிக்கு வந்த பொம்மைகள்!
ரெடி... டேக்... எக்ஸாம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close