ஸ்கூல் ஸ்பெஷல்!

விளையாட்டு!

கராத்தே, சதுரங்கம். யோகா, கால்பந்து, சிலம்பம் என எங்கள் பள்ளியின் ஒவ்வொரு மாணவரும், விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துவருகிறோம்.  

கலைகள்!

 

பரதம், வெஸ்டர்ன் டான்ஸ், கீ போர்டு என கலைத் துறையில் கலக்கிவருகிறோம். சிறிய வகுப்பு மாணவர் களின் மொழி உச்சரிப்புக்காக, ‘துளிர்’ என்ற கணிப்பொறி வகுப்பு நடப்பது எங்கள் பள்ளியின் ஸ்பெஷல்.

சமூகம்!

 

மரம் வளர்ப்பு, ஓவியக் கண்காட்சி, சாரணர் இயக்கம் மூலம் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் என சமூகம் சார்ந்த பணிகளிலும் எங்கள் பள்ளி ஈடுபடுகிறது.

சதுரங்க மங்கை

எங்கள் பள்ளியின் சதுரங்க மங்கை, 9-ம் வகுப்புப் படிக்கும் பிரதீபா.

சேலம், பள்ளிக் கல்வித்துறை சார்பில்       2014-15- ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழா சதுரங்கப் போட்டியில், முதல் இடம் பிடித்தார். இது ஒரு சாம்பிள்தான். இவர் வீட்டில்  பதக்கங்களும் கோப்பைகளுமே நிறைந்திருக்கும்.

இவர் பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 100-க்கும் மேலே. பிரதீபாவை நாங்கள், ‘செஸ் செஞ்சுரி’ என்றே செல்லமாக அழைக்கிறோம். 

முன்னோடிகள்

எங்கள் பள்ளியில் படித்த பல மாணவர்கள், தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளில் மேற்படிப்பில் அசத்தி வருகிறார்கள். அவர்களில், சங்கமித்ரா, அனந்த் பாரதி, கெளரி சங்கர் ஆகியோர் மருத்துவம் படித்துவருகிறார்கள். அடிக்கடி எங்களைச் சந்தித்து ஊக்கப்படுத்தும் பாசமிகு முன்னோடிகள்.  

வழிகாட்டிகள்

 

சேலம், ‘Knowledge Institute of Technology’ நிறுவனத்தின் முதல்வர், டாக்டர் பி.எஸ்.எஸ்.சீனிவாசன் மற்றும் ‘ஐஸ்வர்யம் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்’ இயக்குநர், டாக்டர் பி.பழனியப்பன் ஆகியோர் எங்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து, கல்வி சம்பந்தமான பல்வேறு வழிகாட்டுதல்களை  எங்களுக்கு அளித்துவருகிறார்கள்.  

தொகுப்பு: ப.சக்தி சம்யுக்தா, இ.நிவாஷினி, அ.சரண், ஜீ.கார்த்திக்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick