Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சலங்கையும் சக்கரமும்

அசத்தும் மஹாலட்சுமி

‘‘டிஸ்கவரி சேனலில் வரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ மாதிரி என்னை ஒரு தீவில் விடுறதா இருந்தா, ரெண்டே ரெண்டு விஷயம்தான் கேட்பேன். ஒண்ணு, சலங்கை. அடுத்தது,         ஸ்கேட்டிங் ஷூ. எனக்கு டான்ஸும் ஸ்போர்ட்ஸும் சாப்பாடு, தண்ணீர் மாதிரி” எனக் குறும்புடன் புன்னகைக்கிறார் மஹாலட்சுமி.

பொள்ளாச்சியில் உள்ள பி.கே.டி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மஹாலட்சுமி, கால்களில் ஸ்கேட்டிங் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, பரதம் ஆடுவதில் பல்வேறு சாதனைகள் படைத்துவருகிறார்.

“நான், கிளாஸ்ல இருக்கிற நேரத்தைவிட கிரௌண்டில் இருக்கிற நேரம்தான் அதிகம். ஸ்கூலில் எந்த விளையாட்டு நடந்தாலும் முதல்ல பெயர் கொடுப்பேன். மற்ற விளையாட்டைவிட கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கிட்டு சாகசம் பண்ற ஸ்கேட்டிங் மேலே ஆர்வம் அதிகம். எட்டு வயசுல ஸ்கேட்டிங் கிளாஸ் போக ஆரம்பிச்சேன்.  10 வயசுல பரதம் கத்துக்கிட்டேன். அப்போதான், ஸ்கேட்டிங்கையும் பரதத்தையும் சேர்த்து செய்தால் என்னன்னு ஒரு ஐடியா வந்துச்சு” என்கிறார் மஹாலட்சுமி.

 

இது பற்றி அப்பாவிடம் சொன்னபோது, ரொம்ப டென்ஷன் ஆகிட்டார். ‘ஸ்கேட்டிங்கும் வேண்டாம், பரதமும் வேண்டாம். எல்லாத்தையும் நிப்பாட்டு’னு சொன்னார். ஆனா, நான் விடவில்லை. ஸ்கேட்டிங் மாஸ்டர் செந்தில், பரதம் சொல்லிக்கொடுக்கும் கீதா பிரகாஷ் இரண்டு பேர்கிட்டேயும் பேசினேன். ‘நல்லா இருக்கே. எங்களுக்கும் இது புது அனுபவமா இருக்கும்’னு சம்மதிச்சாங்க. அப்பாவையும் சம்மதிக்கவெச்சு ஒரே இடத்துக்கு வந்து பயிற்சி கொடுத்தாங்க” என்கிறார் மஹாலட்சுமி.

மிக விரைவிலேயே, கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பரதத்தை அரங்கேற்றம் செய்துள்ளார் மஹாலட்சுமி. அதைப் பார்த்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு வந்திருக்கிறது.

‘‘திருநெல்வேலி, மதுரை தொடங்கி நேபாளம், அந்தமான் வரைக்கும் போய்ட்டு வந்துட்டேன். மாதத்தில் நான்கு நிகழ்ச்சிகளாவது செய்திடுவேன். இதில் இன்னும் என்ன புதுமை படைக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். உங்களுக்கும் என்ன ஐடியா தோணினாலும் சொல்லுங்க.” எனச் சிரிக்கிறார்.

- பா.நரேஷ் படங்கள்: க.சத்தியமூர்த்தி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கே.ஜி.கிளிக்ஸ்!
மனம் உறுதிகொள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close