Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைரல் ஹிட்ஸ்!

வால்வோ டிரக்குகள் அதன் உறுதியான வடிவமைப்புக்காக பெயர் பெற்றவை. ஆனாலும் வால்வோ நிறுவனத்துக்கு திருப்தி வரவில்லை. அதுதானே மேலும் மேலும் ஆச்சர்யங்களைக் கண்டறியத் தேவை? இன்னும் உறுதியான ஒரு டிரக்கை உருவாக்கினார்கள். அதை சோதித்துப் பார்க்க அவர்கள் தேர்ந்தெடுத்த டிரைவரின் பெயர் சோஃபி, வயது நான்கு. ஆம், நான்கே வயதுதான். அவ்வளவு பெரிய டிரக்கை, ரிமோட்டில் இயங்கவைத்தார் சோஃபி. ஜேம்ஸ் பாண்ட் பட சேஸிங் போல உருட்டிப் புரட்டிவிட்டார். எல்லாவற்றையும் தாங்கி, நிமிர்ந்து நிற்கிறது புதிய வால்வோ டிரக். சோஃபியின் சூப்பர் சேஸிங்கை ஒரு கோடி பேர் பார்த்து  ரசித்து இருக்கிறார்கள்.https://www.youtube.com/watch?v=7kx67NnuSd0

மேஜிக் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இதில் ஆச்சர்யம் என்னவென்றால், மேஜிக்கை ரசித்து மகிழ்வது ஒரு குரங்கு. டான் ஸலெஸ்கி என்பவர் ஒரு உயிரியல் பூங்கவில் நடந்த குரங்குகள் கண்காட்சிக்கு சென்றிருந்தார். அங்கே, டம்ளருக்குள் ஒரு பந்தை வைத்து குரங்கின் முன்பு மேஜிக் செய்தார். விழிகள் விரிய பார்க்கிறது குரங்கு. முடிவில், பந்தைக் காணவில்லை என்றதும் குரங்கின் ரியாக்‌ஷனைப் பாருங்கள். அந்த சில நொடி எக்ஸ்பிரஷனைத்தான் ஒன்றரைக் கோடி பேர் ரசித்து இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=FIxYCDbRGJc

‘கண்ணால் காண்பது பொய்’ என்பார்களே. அதுக்கு சரியான உதாரணம் இந்த வீடியோ. 2D பொருட்களைவைத்து 3D தோற்றத்தை உருவாக்குவது ஒரு கலை. அதில், ‘பிரஸ்பப்’ என்பவர் சூப்பர் ஸ்டார். சாதாரண காகிதத்தை வைத்தே 3D தோற்றங்களை உருவாக்கி, நெட்டில் ஹிட் அடித்தவர். எது உண்மை, எது மாயத்தோற்றம் என்பதில் இருக்கும் குட்டி குட்டி சர்ப்ரைஸ்தான் இவர் வீடியோக்களின் சிறப்பு அம்சம். அதுபோன்ற வீடியோதான் இது. 35 லட்சம் பேரை ‘வாவ்’ போட வைத்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=GIvD-_ITco8

ரிமோட் கார்... வார்த்தையைப் படித்ததுமே  குஷி ஆகிவிட்டீர்கள்தானே? அதுதான் கார்களின் சிறப்பு அம்சம். ‘டூட் பெர்ஃபெக்ட்’ என்ற யூ டியூப் சேனலில் பல சாகச வீடியோக்கள் வெளிவந்திருந்தாலும் ‘மாஸ் ஹிட்’ ரிமோட் கார் வீடியோதான். தண்ணீரில் ஓடும் ரிமோட் கார், வீட்டுக்குள்ளே சீறிப்பாயும் கார் எனப் பல கார்களின் தொகுப்பு வீடியோ இது. பொருத்தமான பின்னணி இசை, நாம் பறப்பது போன்ற உணர்வைத் தருகிறது. சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டு வீடியோவை ஓடவிடுங்கள்.

https://www.youtube.com/watch?v=ym9E1YG3_QQ

-கார்க்கிபவா
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எங்கள் பள்ளி!
தன்னம்பிக்கை தந்த கடல் பூதம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close