ஜோரா வெச்சோம் ஜாலி பொங்கல்!

‘‘பொங்கல் அதுவுமா ‘என் பள்ளி என் சுட்டி’ செய்றோம். உற்சாகமான பொங்கல்னா கலாட்டா இல்லாட்டி எப்படி? நாளைக்கே ஸ்கூல்ல பொங்கல் வைக்கிறோம்’’ என்றார் சிநேகா.

“முக்கியமான கண்டிஷன், பாய்ஸ்தான் இந்தப் பொங்கலை வைக்கணும்.பானையைக் கொண்டுவர்றது, அடுப்பைப் பத்தவைக்கிறது, அரிசி போடுறது எல்லாமே பாய்ஸ்தான் செய்யணும். நாங்க, கரும்போடு வந்து குறும்பு பண்ணுவோம் அவ்வளவுதான்’’ என்றார் தர்ஷனா.

‘‘அதுக்கென்ன செஞ்சுருவோம்’’ எனப் பசங்களும் ஒப்புக்கிட்டாங்க. அடுத்த நாள், சில பொண்ணுங்க, அவங்க அப்பாவின் வேட்டி சட்டையை எடுத்துக்கிட்டு வந்துட்டாங்க. மீசையை வரைஞ்சுக்கிட்டு, பொங்கல் கலாட்டாவில் கலந்துக்கிட்டாங்க. எங்களுக்கு ஒரே ஒரு வருத்தம்தான். நாங்க வெச்ச பொங்கலை, டீச்சர்ஸுக்கு ஆசையோடு கொண்டுபோய் கொடுத்தோம். ஒருத்தரும் வாங்கிக்காம, மிரண்டு ஓடிட்டாங்க.

- பொங்கல் பார்ட்டிகள்: செ.அபிராம லட்சுமி, அ.மேகா, மா.கு.சரயு, சி.சிநேகா, ர.பிரியா, இ.ஜெமிமா ஷாரன், ஜெ.தர்ஷனா, காசியா, அ.ஹஷினி, நீலாவதி, மு.மணீஷ் நந்தா, ரா.பார்கேஷ்வரன், தீபக் ராஜ், அனுப் குமார், பழனிவேல். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick