Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூக்கைப் பிடி...வாயைப் பிடி!

பாடம் நடத்தறோம்னு, எத்தனை டீச்சர்ஸ் எத்தனை முறை எங்கக் கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி செஞ்சிருக்காங்க. கொஞ்ச நேரம் அவங்க கண்களைக் கட்டி, விளையாடவிடணும்னு ஒரு பிளான் போட்டோம்.

12 டீச்சர்ஸை ஸ்கூல் கேன்டீனுக்கு கூட்டிட்டு வந்து, டைனிங் டேபிளில் உட்காரவெச்சோம். ‘‘உங்க முன்னாடி பிஸ்கட், சாக்லேட், கூல்டிரிங்ஸ் வெச்சுட்டு கண்களைக் கட்டிடுவோம். ஆளுங்களையும் மாத்தி உட்காரவெச்சுருவோம். எந்த டீச்சர் எந்த டீச்சருக்கு, எந்த உணவை ஊட்டிவிடச் சொல்றோமோ, அதைச் செய்யணும். யார் சீக்கிரமா செய்றாங்களோ, அவங்களுக்குப் பரிசு’’னு சொன்னோம்.

போட்டி ஆரம்பிச்சதும் பரபரனு பிஸ்கட், சாக்லேட்டைத் தேடி எடுத்தாங்க. ‘‘சங்கீதா எங்கே இருக்கே? விக்டோரியா எங்கே இருக்கே?’’னு கேட்டுக்கிட்டே, கைகளைக் காற்றில் தடவினாங்க. அவங்க முகத்தைப் பிடிச்சு, வாயைக் கண்டுபிடிச்சு ஊட்டிவிட்டாங்க. சில டீச்சர்ஸ், காது எது மூக்கு எதுனு தெரியாம திணறியது செம காமெடி.

கடைசியில், ‘‘ஜெயிச்சவங்களுக்கு என்ன பரிசு?’’னு கேட்க, ‘‘நீங்க சாப்பிட்ட பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ்தான் பரிசு’’னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டோம்.

- ர.பிரியா, சீ.பூஜாஸ்ரீ, சி.நிநேகா, காசியா, சி.கிருத்திகா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அலாவுதீன் கிட்ஸ்!
சல்யூட் சாதனை!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close