Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரிப்போ சிரிப்பு!

‘‘ஒருத்தர் டூவீலரில் போய்ட்டு இருந்தார். ரெட் சிக்னல் போட்டுட்டாங்க. ஆனாலும் அவரு நிற்கலை. ஏன்?’’

“எதுக்கு நிற்கணும்? டூவீலரில் உட்கார்ந்து இருந்தாலே போதுமே!’’

‘‘ஒரு பஸ்ல ரெண்டாயிரம் பேர் இருந்தாங்க. அது எப்படி?’’

“ஒருத்தன் பேரு கண்ணாயிரம், இன்னொருத்தன் பேரு பொன்னாயிரம்!’’

‘‘ஞானப்பழம் விஷயத்தில் விநாயகருக்கும் முருகருக்கும் மறுபடியும் சண்டை. ‘யார் கம்ப்யூட்டர் கிளாஸை சீக்கிரம் முடிக்கிறாங்களோ, அவங்களுக்குப் பழம்’னு சிவன் சொல்றார். யார் ஜெயிப்பா?’’

விநாயகர்தான். ஏன்னா, அவர்கிட்டே மவுஸ் இருக்கே!’’

‘எவ்வளவுதான் காத்து அடிச்சாலும், ரமேஷ் அப்பாவுக்கு மட்டும் வேர்க்கும். ஏன் சொல்லு?’’


‘‘ஏன்னா, அவர்தான் சைக்கிள் கடையில, பம்பு வெச்சு காத்து அடிக்கிறாரே.’’

‘‘தாஜ்மஹாலுக்கு கலர் கலரா பெயின்ட் அடிச்சா என்ன ஆகும்?’’

‘‘நிறைய செலவு ஆகும்!’’

‘‘ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் நடந்து போயிட்டு இருந்தாங்களாம். ஒரு சாலை வந்ததும் தம்பி நின்னுட்டாராம். அண்ணன் மட்டும் போனாராம். ஏன்?’’

“ஏன்னா, அது அண்ணா சாலை!’’

அனூப் சச்சின், ரெ.ராகுல்நாத், மா.பா.ஹயகிரிவாஸ்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மூக்கைப் பிடி...வாயைப் பிடி!
ஜோரா வெச்சோம் ஜாலி பொங்கல்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close