Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

க்யூட் ஸ்டோரி - 2

வண்ணத்துப்பூச்சியின் வருத்தம்!

ழகான தோட்டம் ஒன்றில், நிறையச் செடிகளும் மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. வண்ண வண்ணப் பூக்கள் பூத்திருந்தன.தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் பூக்களைச் சுற்றி வட்டம் அடித்து, தேனை உறிஞ்சின. வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஒரு வருத்தம். அவை கூட்டம் போட்டுப் பேசின.

‘‘தேனீக்கள், பூக்களில் இருந்து அதிகமான தேனை எடுத்துவிடுவதால்,  நமக்கு தேன் கிடைக்காமல் போகிறது. அதனால், ராணித் தேனீயைச் சந்தித்து ஓர் ஒப்பந்தம் போட வேண்டியது கட்டாயம்’’ என்றது ஒரு வண்ணத்துப்பூச்சி.

அதன்படி, ராணித் தேனீயை சந்தித்த வண்ணத்துப்பூச்சியின் தலைவர், ‘‘ராணியாரே, நீங்கள் தேன்கூடு கட்ட பெரும் பகுதியான தேனை உறிஞ்சுவது சரியல்ல. பூக்களில் இருந்து இவ்வளவு தேனைத்தான் எடுக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம்’’  என்றது.

இதைக் கேட்ட ராணித் தேனீ, ‘‘யாரும் யாருக்கும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்’’ எனச் சொல்லிவிட்டு கூட்டுக்குள் சென்றுவிட்டது.

வருத்தத்துடன் திரும்பிய வண்ணத்துப்பூச்சி தலைவர், ஓர் இலையில் அமர்ந்தது. அங்கே வந்த வண்டு ஒன்று, ‘‘ஏன் சோகமாக இருக்கிறாய்?’’ என்று கேட்டது.

விஷயத்தைச் சொன்ன வண்ணத்துப்பூச்சி, ‘‘இந்த ராணித் தேனீ இவ்வளவு சுயநலமாக இருக்கும் என நினைக்கவில்லை” என்றது.

அதற்கு வண்டு, ‘‘நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். தேனீக்கள், தனக்காகத் தேனை எடுப்பது இல்லை. அவை சேகரிக்கும் தேன், பல லட்சம் மனிதர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தனக்காக அல்லாமல், பிறருக்காக வாழ்பவர்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றது.

வண்டு சொன்ன விஷயத்தில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்ட வண்ணத்துப்பூச்சி, ராணித் தேனீயைச் சந்தித்து பாராட்டுவதற்காக, மீண்டும் தேன்கூட்டை நோக்கிப் பறந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
க்யூட் ஸ்டோரி - 1
மனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close