நட்சத்திர நாயகன்!

மீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தை மறக்க முடியுமா? அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து, நட்சத்திர மதிப்பைப் பெற்றனர். அப்படி ஒரு நட்சத்திரம்தான் எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பிரணவ். அப்படி என்ன செய்தார்?

இவர் வரைந்த 45 ஓவியங்களை வைத்து கண்காட்சி நடத்தி, அதன் மூலம் கிடைத்த 81,500 ரூபாயை வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தார்.

“எனக்கு சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரைவதில்ஆர்வம் அதிகம். வீட்டுச் சுவர்ல கிறுக்குற பையனை, என்கரேஜ் பண்ற பேரன்ட்ஸை நீங்க சினிமாவுலதான் பாத்திருப்பீங்க. ஆனா, என் பேரன்ட்ஸ் நிஜமாவே பாராட்டுவாங்க. ஒவ்வொரு போட்டியிலும் கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டு வரும்போது, எல்லார்கிட்டேயும் காண்பிச்சு பெருமைப்படுவாங்க. அப்போ கிடைச்ச சந்தோஷத்தைவிட, இப்போ அதிகம் சந்தோஷப்படுறேன். வெள்ளத்தால் மக்கள் பட்ட கஷ்டத்துக்கு என்னால முடிஞ்சதைச் செய்யணும்னு, அப்பாகிட்ட இந்த ஐடியாவைச் சொன்னேன். உடனே, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆன்லைனிலும் ஓவியங்களை விற்றேன். நான் கற்ற ஓவியக் கலைக்கு இதுதான் உண்மையான பெருமை’’ என்கிறார் பிரணவ்.

இவர், எங்கள் பள்ளி நண்பர் எனச் சொல்வதில் எங்களுக்கும் பெருமை.

- ரா.பார்கேஷ்வரன், மு.மணீஷ் நந்தா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick