ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நீங்க ‘பசங்க-2’ படம் பார்த்தீங்களா? அந்தப் படத்தின் கிளைமாக்ஸில், குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் போட்டி நடக்கும். அதில், ஒரு சுட்டிப் பையன் மேஜிக் செய்ற மாதிரி ஒரு காட்சி வரும். அது, வேற யாரும் இல்ல, எங்க பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மிரித்திலேஷ்தான்.

“எங்க மாமா அருண் லோகநாதன், ஒரு இன்டர்நேஷனல் மேஜிஷியன். அவரைப் பார்க்கப் போகும்போது சின்னச்சின்னதா மேஜிக் சொல்லிக்கொடுப்பார். அதை கிளாஸ்ல செஞ்சு காட்டி, சட்டைக் காலரை கெத்தா தூக்கி விட்டுக்குவேன். ஃப்ரெண்ட்ஸ் பாராட்டப் பாராட்ட இன்னும் நிறைய மேஜிக் கத்துக்கிட்டு அசத்தணும்னு ஆசை வந்துச்சு” என்று சிரிக்கிறார் மிரித்திலேஷ்.

‘தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ வழங்கிய  Youngest Fastest Magician விருதைப் பெற்றிருக்கும் மிரித்திலேஷ், எங்கள் பள்ளியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், மேஜிக் செய்துகாட்டி அசத்தி இருக்கிறார்.
 

‘‘நிறைய ஸ்டேஜ் புரோகிராம் செஞ்சிருக்கேன். எங்க மாமா மூலம்தான் ‘பசங்க-2’ படத்தில் மேஜிக் செய்ற சான்ஸ் கிடைச்சது. உலக அளவில் பெரிய மேஜிஷியன் ஆகிறதுதான் என்னோட ஆசை’’ என்ற மிரித்திலேஷ், ஒரு வகுப்பறையில் மேஜிக் செய்து காட்டினார்.


“எல்லாம் சரி, ஒவ்வொரு மேஜிக் பின்னாடி இருக்கிற ரகசியத்தைச் சொல்லுடானு ஃப்ரெண்ட்ஸ் எத்தனை முறை கேட்டிருக்கோம். உன்னை பேட்டி எடுத்துப் போடுறோம் இப்பவாவது சொல்லேன்’’ என்று நைஸாகக் கேட்டோம்.

 

“ஹஸ்க்கு... அது மட்டும் சொல்ல மாட்டேன். அதெல்லாம் தொழில் ரகசியம்’’ என்றபடி எஸ்கேப் ஆனார் மிரித்திலேஷ்.

- அ.மேகா, இ.ஜெமிமா 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick