வகுப்புக்கு வரும் மிக்கி மவுஸ்!

'மிமிக்ரி' கைலாஷ்

“ஹலோ கிட்ஸ், நான்தான் டொனால்டு டக். உங்க பேர் சொல்லுங்க” என்றபடி கே.ஜி கிளாஸுக்குள் கைலாஷ் நுழைந்தாலே, எல்லாச் சுட்டிகளும் குஷி ஆகிவிடுவார்கள். அடுத்த 15 நிமிடங்களுக்கு அந்த வகுப்பறையில்  மிக்கி மவுஸ் பாடும், ரயில் ஓடும், டைனோசர் கத்தும்.

“நான், வேலம்மாள் வித்யாலயாவில் நைன்த்  படிக்கிறேன். ஃபோர்த் ஸ்டாண்டர்டு படிக்கும்போது, மிமிக்ரி இன்ட்ரஸ்ட் வந்துச்சு. டி.வி-யில் வரும் கார்ட்டூன் கேரக்டர்ஸ், அனிமல்ஸ், பேர்ட்ஸ் எல்லாத்தையும் பார்த்து, பிராக்டிஸ் பண்ணினேன். மோனோ ஆக்டிங் கத்துக்கிட்டேன். ‘ரொம்ப நல்லா செய்றே’னு எல்லோரும் பாராட்டினாங்க. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மாதிரி செய்வேன். எனக்கு எப்பவும் ஜாலியா இருக்கணும். எல்லோரையும் சிரிக்கவெச்சுக்கிட்டே இருக்கணும். வருங்காலத்தில், என் பெயரைச் சொன்னாலே குழந்தைகள் குஷியாகணும்” என்று சொல்லிவிட்டு துள்ளலுடன் ஓடினார்.

- க.சு.அனுஸ்ரீ, ஹ.ந.ஸ்ரீஹரிணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick