வடிவங்கள் அறிவோம்!

‘வடிவங்கள்’ பாடத்துக்கு உரியது.

மாணவர்கள், வடிவங்களை எளிதாகத்  தெரிந்துகொள்ள செயல்பாடு ஒன்றைச் செய்யவைத்தேன்.

அவர்களைக் குழுக்களாகப் பிரித்தேன். நான் ஒரு வடிவத்தைக் கூற, எந்தக் குழு விரைவாக அந்த வடிவத்தை தங்களுக்குள் அமைக்கிறார்களோ, அவர்களுக்கு மதிப்பீடு வழங்கினேன்.

பிறகு, அட்டைகளில் தங்களுக்குத் தெரிந்த பல்வேறு வடிவங்களின் மாதிரிகளை உருவாக்கச் சொல்லி, அந்த வடிவங்கள் பற்றிக் கூறச் சொன்னேன். இறுதியாக, இரு பரிமாண மற்றும் முப்பரிமாண வடிவங்களின் அமைப்பு மற்றும் வேறுபாடு பற்றி விவரித்தேன். அவர்களின் வீடுகளில் காணப்படும் பல்வேறு வடிவப் பொருட்களைச் சேகரித்து வரச் சொல்லி, செயல்திட்டம் ஒன்று வழங்கினேன். இதன் மூலம், இரு பரிமாண மற்றும் முப்பரிமாண வடிவங்கள், அதன் அமைப்பு பற்றி  அறிந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்