வகுப்புக்கு வந்த வீர சிவாஜி!

‘மராத்தியர்கள்’ பாடத்துக்கு உரியது.

குப்பறையை நாடக மேடையாக மாற்றி, வீர சிவாஜி மற்றும் அவரது அமைச்சர்களாக மாணவர்களை நடிக்கவைக்க முடிவுசெய்தேன்.

வீர சிவாஜியாக நடிக்க, விஜய் என்ற மாணவன் முன்வந்தான். மற்ற மாணவர்களில்  எட்டு பேரை அமைச்சர்களாக நடிக்கச் சொன்னேன்.

சிவாஜியாக நடிக்கும் மாணவன், வீர சிவாஜி பிறந்த ஆண்டு, தந்தை, தாய் அவரது நிர்வாகம் பற்றிக் கூறினார். மற்ற மாணவர்கள், அவர்களின் நிர்வாகப் பொறுப்புகளைக் கூறினர்.

பிறகு, பார்வையாளர்களாக இருந்த மாணவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன். சரியான பதில்களைக் கூறினர். சிவாஜியாக நடித்த மாணவனை, ‘மலை எலி' என்று மாணவர்கள் அழைத்தார்கள். அமைச்சர்களையும் அவர்களின் பதவியால் அழைத்தனர். மராத்தியர் ஆட்சிக் காலத்தில், வீர சிவாஜி ஆட்சியின் செயல்பாடுகளை மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்