ஹலோ ஆப்ஸ் நண்பா!

காலை எழுந்ததும், பல் துலக்க ஞாபகப்படுத்துவது முதல் பாடங்களின் சந்தேகங்கள் வரை, அனைத்துக்கும் ஆப்ஸ் பயன்படுத்துவது தினசரி அங்கமாகிவிட்டது. நல்ல நண்பர்களைக் கண்டறிவது எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் நல்ல 'ஆப்ஸ்'களைக்  கண்டறிவதும். அதற்கு என்ன செய்யலாம்?

போடுங்க ஆன்டி வைரஸ்!

ஒரிஜினல் எது, போலி எது என்று புரியாதவண்ணம் ஏராளமான போலி ஆப்ஸ்கள், வைரஸோடு பின்னிப் பிணைந்தே உலவுவதால், நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போலி ஆப்ஸ், நம் அனுமதியின்றி ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை ‘அபேஸ்’ பண்ணிவிடும்.

அது மட்டுமா? வைரஸ் பாதித்த ஆப், உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அனுப்புவது போல, உங்கள் நண்பர்களுக்குத் தவறான செய்திகளையும் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கும். நீங்கள் அனுப்பவே இல்லை என ப்ராமிஸ் செய்யும் நிலையை உண்டாக்கும். எனவே, ஆப்ஸ் டவுண்லோடு செய்யும் முன் வைரஸ் இல்லாத, பாதுகாப்பான ஆப்ஸ் தானா எனக் கண்டறிவது முக்கியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்