சோப்புகளை வாங்கி விற்போமா?

‘நான்கு அடிப்படைச் செயல்பாடுகள்

மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கவும். பேனா, பென்சில், சாக்லேட், சோப்பு, எண்ணெய்... போன்ற பல பொருட்களைக் கொடுக்கவும். அவற்றின் விலைகளைக் குறிப்பேடுகளில் எழுதச்செய்து, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைச் செய்முறையாகச் செய்யவைக்கலாம்.

கூட்டல்: 2 சோப்பு, 1 பாக்கெட் எண்ணெய், ஒரு பேனா இவற்றின் மொத்த விலை எவ்வளவு?

கழித்தல்: உன்னிடம் தரும் 100 ரூபாய்க்கு 2 பென்சில்கள், ஒரு பாட்டில் ஷாம்பு வாங்கினால், மீதம் எவ்வளவு ரூபாய் இருக்கும்?

பெருக்கல்: 10 சாக்லேட்டுகளின் விலை 5 ரூபாய் எனில், 50 சாக்லேட்டுகள் வாங்க எவ்வளவு பணம் தேவை?

வகுத்தல்: ஒரு பேப்பர் கப்பில் 50 கிராம் பருப்பை நிரப்பலாம் எனில், 200 கிராம் பருப்பை எத்தனை கப்புகளில் நிரப்பலாம்?

எண்களை எழுதி கணக்குகளைச் செய்வதற்குப் பதிலாக, செயல்பாடாகச் செய்யும்போது, மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்வர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்