வண்ணமயமான பூச்சி!

‘வண்ணத்துப்பூச்சியும் தேனீயும்’ பாடத்துக்கு உரியது.

‘வண்ணத்துப்பூச்சி யாருக்கெல்லாம் பிடிக்கும்?' என்ற கேள்விக்கு, மாணவர்கள் எல்லோரும் கையைத் தூக்கினர். ‘சரி, வண்ணத்துப்பூச்சி பற்றிய செயல்பாடு செய்ய ரெடியா?' என்று கேட்கும்போதே தயாராக முன் வந்தார்கள்.

வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றி முதலில் மாணவர்களிடம் விளக்கிக் கூறினேன். பிறகு, மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தேன்.  ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பருவத்தைக் கொடுத்து, சார்ட் பேப்பரில் வரையச் சொன்னேன். பிறகு, குழுவுக்கு ஒருவரை அழைத்து, வரைந்த பருவத்தைப் பற்றி கூறிவிட்டு, வட்டத்தில் நிற்கச் சொன்னேன். முதல் குழு என்றால், ‘நான்தான் வண்ணத்துப்பூச்சியின் முட்டை. நான், இலையின் அடிப்பகுதியில் இருப்பேன்' எனக் கூறினர். இவ்வாறு எல்லா குழுக்களும் வட்டமாக நின்று, அதன் வாழ்க்கைச் சுழற்சி அமைப்பை ஏற்படுத்தி அசத்தினார்கள். மேலும், பல வண்ணங்களில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளின் படங்களையும், பல்வேறு பூச்சிகளின் படங்களையும் சேகரித்து, படத்தொகுப்பு ஒன்று தயாரிக்கச் சொன்னேன்.

உங்கள் பள்ளியிலும் இதுபோல செய்யலாமே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்