புலி உறுமுது!

‘விலங்குகள் வாழிடங்கள்’ பாடத்துக்கு உரியது.

‘‘எங்கிட்ட, உறுமுற புலி இருக்கு.''

‘‘எங்கிட்ட, துள்ளிப் பாயும் மான் இருக்கு'' என்று தங்களிடம் உள்ள பொம்மைகளைப் பற்றி மாணவர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். அதை வைத்தே செயல்பாடு செய்யவைத்தேன்.

மாணவர்களிடம், வீட்டில் உள்ள விலங்குப் பொம்மைகளை எடுத்து வரச் செய்தேன். அந்த விலங்குகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த செய்திகளை, மற்ற மாணவர்களோடு கலந்துரையாடச் செய்தேன்.

பிறகு, ஒவ்வொருவரையும் அழைத்து, தங்களிடம் உள்ள விலங்கின் பெயர், அதன் சரணாலயம் தமிழ்நாட்டில் எங்கு அமைந்திருக்கிறது போன்ற செய்திகளைக் கூறச் சொன்னேன்.

அடுத்து, மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, விலங்குகளின் வாழிடம் அழிவதால் ஏற்படும் தீமைகள் குறித்துக் கலந்துரையாடச் செய்தேன். காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வு வார்த்தைகளை உருவாக்கவைத்தேன்.

காடுகள் அழிவதால் ஏற்படும் தீமை, அதைத் தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவு, குழு மனப்பான்மை, எடுத்துரைக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்