குழுவாகச் செய்வோம் மனப்பாடம்!

மனப்பாடப் பகுதிக்கு உரியது.

மாணவர்களின் மனதில் Poem பகுதி நன்கு பதிய, செயல்பாடு ஒன்றைச் செய்யலாம். மாணவர்களை, இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். முதல் குழுவுக்குப் பாடலின் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய வரிகளையும், இரண்டாம் குழுவுக்கு 2, 4, 6, 8, 10 ஆகிய வரிகளையும் பிரித்துக்கொடுக்கவும்.

ஒரு குழுவை நிற்கவைத்து, அடுத்த குழுவை உட்காரவைக்கவும். முதல் குழு, அவருக்கான ஒரு வரியைப் படிக்க வேண்டும். அடுத்த குழு, தங்களின் முதல் வரியைப் படிக்க வேண்டும். இந்த முறையில், இன்னும் சில தடவைகள் படிக்க வேண்டும். நான்காவது முறை சொல்லும்போது, முதல் வரியையும், ஐந்தாவது முறை சொல்லும்போது இரண்டாம் வரியையும் பார்க்காமல் கூற வேண்டும். இப்படி ஒவ்வொரு முறைக்கும் ஒரு வரியைப் பார்க்காமல் கூற வேண்டும். இவ்வாறு அனைத்து வரிகளும் முடிந்ததும், புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு, இரண்டு குழுக்களும் மரத்தைச் சுற்றி நின்றுகொண்டு Poem வரிகளைக் கூற வேண்டும்.

இப்படி விளையாட்டு மூலம் கற்பதால், மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பர். இது, படிக்கும் திறனையும் நினைவாற்றலையும் ஒருசேர வளர்க்க உதவும். நீங்களும் உங்கள் பள்ளியில் இதுபோல முயற்சிக்கலாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்