ஐந்து நிமிடப் போட்டி!

பொதுவானது

ங்கள் வகுப்பில், நிமிடப் போட்டிகளை அடிக்கடி நடத்துவேன். இன்று நடந்த ஐந்து நிமிடப் போட்டியைப் பார்ப்போமா?

மாணவர்களைத் தனியாகவோ, குழுவாகவோ இந்தச் செயல்பாட்டைச் செய்யவைக்கலாம்.

I am ------------ என்று எழுதிவிட்டு, ‘இதில் ing என்ற எழுத்துகள் வரும் சொற்களை எழுதுகிறவர்களுக்குப் பரிசு காத்திருக்கிறது' என்று அறிவித்தேன்.

I am Walking / Sleeping / Eating / Thinking . . .

இப்படி மாணவர்கள் எழுதிக் குவித்தனர். அதிகபட்சமாக 20 சொற்களை எழுதிய மாணவிக்கு, பேனாவும் புத்தகமும் பரிசு அளித்தேன்.

இந்தச் செயல்பாட்டையே அடுத்த நாள் எழுதி வரச்சொன்னபோது, மாணவர்கள் ஆர்வத்துடன் செய்தார்கள். போட்டி என்றதும் உற்சாகம் வரும். பரிசுடன் போட்டி என்றால், பெரும் குதூகலத்துடன் கலந்துகொள்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்