கைதட்டி மதிப்பெண் பெறு!

Grammar பகுதிக்கு உரியது.

ங்கிலச் சொற்களை, அதன் பொருளோடு அதிக அளவில் தெரிந்துகொள்ளும்போது, உரையாடுவதற்கும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும். அதேபோல, ஒரு சொல்லின் அசை (சிலபல்) பிரித்துச் சொல்லிப் பழகுதல் மிக முக்கியம்.

ஆசிரியர், மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஆங்கில வார்த்தைகளை எழுதச்செய்யவும். அந்த வார்த்தைகளை அசை பிரித்து எழுதச்செய்து, சிலபலுக்கு ஏற்றார்ப்போல கைதட்டச் செய்யவும். அவர்கள் சரியாகச் செய்கிறார்களா என மதிப்பிடவும்.இதேபோல, மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து நிற்கவைக்கவும். ஆசிரியர் ஒரு சொல்லைச் சொன்னதும், முதல் குழு அசை பிரித்துக்  கைதட்ட வேண்டும். சரியாகச் செய்தால், ஐந்து மதிப்பெண்கள். தவறாகச் செய்துவிட்டால், அதைச் சரியாகத் திருத்திக் கைத்தட்டும் அடுத்த குழுவுக்கு 10 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இதனால், தவறாகச் செய்துவிட்டால், எதிர்க் குழுவுக்கு 10 மதிப்பெண்கள் கிடைத்துவிடும் எனக் கவனமாக விளையாடுவார்கள்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்