எங்களுக்குப் பிடித்த கம்பன்!

மனப்பாடப் பகுதிக்கு உரியது.

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' எனும் புகழ்மொழிக்கு உரியவர்தான் கம்பர் என்றதும், மாணவர்களுக்கு கம்பரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது.

மனப்பாடப் பகுதியில் உள்ள வாழ்த்துப் பாடலின் ஆசிரியரான கம்பரைப் பற்றி பல விஷயங்களைச் சொன்னேன். மாணவர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டனர். ‘இந்தக் குறிப்புகளைக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?' என்றதும், வித்தியாசமான மன வரைபடம் தயார்செய்யப்போகிறோம் என்றார்கள்.

சொன்னது போல விதவிதமான மன வரைபடம் வரைந்து அசத்தினர். கம்பரின் படத்தை நடுவில் ஒட்டி, அட்டைகளில் வண்ணத்துப்பூச்சி வடிவங்களை ஒட்டி, அதன்மேல் குறிப்புகளை எழுதியிருந்தனர்.

மாணவர்கள் குறிப்புகளைச் சேகரிக்கும் விதம், அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்