சிறகு முளைத்த சிங்கம்

மா.பிரபாகரன், ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

ந்தச் சிங்கத்துக்கு வேட்டையாடுவது என்றாலே அலுப்பாக இருந்தது. அடர்ந்த காட்டுக்குள் இரை எங்கே இருக்கிறது எனக் காற்றின் திசையில் மோப்பம் பிடித்து, அந்த இடத்துக்குச் செல்ல  வேண்டும்.  இரை அசரும் வரை காத்திருந்து, பாய்ந்து தாக்க வேண்டும்.  பறவைகளுக்கு அப்படியில்லை. அவை வானில் பறப்பதால், இரை இருக்கும் இடம் எளிதில் தெரிந்துவிடும். ‘நமக்கும் அப்படி சிறகுகள் இருந்தால் எப்படி இருக்கும்?' என நினைத்தது.

கடவுளை நினைத்துத் தவம் செய்தது. கடவுளும் வந்தார்.  சிங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகச் சொன்னார்.

சிங்கத்துக்கு, அழகான தங்க நிறச் சிறகுகள் முளைத்தன. ஆனால், அதன் உடல் சுருங்கிப்போனது. வானில் மகிழ்ச்சியோடு பறந்தது. இத்தனை நாளும் இந்த அனுபவத்தைத் தவறவிட்டுவிட்டோமே என எண்ணியது. காட்டைச் சுற்றிச்சுற்றிப் பறந்து வந்தது.

சற்று நேரத்தில் அதற்குப் பசி எடுத்தது. கீழே பார்த்தது. ஒரு பக்கம் வரிக்குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. இன்னொரு புறம் காட்டெருமைகள் கூட்டம். மான்கள், நதிக்கரையோரம் நீர் அருந்திக்கொண்டிருந்தன. ஒரு மான் மட்டும் அசட்டுத் தைரியத்தில், தனியாகப் புற்களைக் கடித்துக்கொண்டிருந்தது. கொழுத்த வேட்டைதான் என எண்ணியபடி சிங்கம் அதன்மீது பாய்ந்தது.

சிங்கம் தாக்கினால், மான் நிலைதடுமாறிக் கீழே விழுந்துவிடும். அது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலுமே ஒழிய எதிர்த்துப் போராடாது. இப்போதோ, மான் எதிர்த்துப் போராடுகிறது. மற்ற மான்களும் உதவிக்கு ஓடிவருகின்றன. கர்ஜனை செய்து அவைகளைப் பயமுறுத்த நினைத்து, வாயைத் திறந்தது சிங்கம். ஆனால், கேவல் போன்ற ஒலிதான் வந்தது. தன் உடல் மட்டும் சுருங்கவில்லை. தனது பலமும் குறைந்துபோனதை உணர்ந்துகொண்டது சிங்கம்.

பயந்துபோய், ஒரு மரத்தின் மீது  அமர்ந்துகொண்டு, மீண்டும் கடவுளை அழைத்தது.

‘‘நான், பறக்க சிறகுகள் வேண்டும் என்றுதானே கேட்டேன். ஏன் என் உடல் சுருங்கியது?'' எனக் கேட்டது சிங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்