கூகுளின் தாத்தா!

L FOR LIBRARY

ங்கள் சந்தேகங்களுக்கும், விடையறியா கேள்விகளுக்கு சட்டென நீங்கள் நாடும் கூகுள் மாமாவும், விக்கி (Wiki) பெரியப்பாவும் வந்திராதபோது, அவர்களுக்கு எல்லாம் தாத்தா ஒருவர் இருந்தார். எல்லாக் கேள்விகளுக்கும் விடைகளை வைத்துக்கொண்டு இப்போதும் இருக்கிறார். அவர்தான் நூலகம் (library).

இந்தச் சொல், லத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. புத்தக அடுக்கு எனப் பொருள்படும் Bibliotheca என்ற சொல்லே, நூலகத்தைக் குறிக்கப் பயன்பட்டது.

நூலகத்தில் புத்தகங்களை வகைப்படுத்தி வைக்க பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றுள் Dewey decimal classification system என்ற முறை 135 நாடுகளில், சுமார் 2 லட்சம் நூலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பொது நூலகம், நகரும் நூலகம், மின்னணு நூலகம், தனியாரின் வாடகை நூலகம்,  பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான நூலகம் என நூலகங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை தவிர, இன்னொரு வகையும் உள்ளது. அதுதான் வீட்டு நூலகம். உங்களுக்கான தனி நூலகத்தை நீங்களே உருவாக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்